• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 14:06:38    
jinjibaihua என்ற சீனத் திரைப்பட விழா

cri

16வது jinjibaihua என்ற சீனத் திரைப்பட விழாவின் முக்கிய பகுதியாக jinji சர்வதேசத் திரைப்படப் பொருட்காட்சி நேற்று சீனக் கிழக்குப் பகுதியின் suzhou நகரில் துவங்கியது.

போலந்து,ரஷியா,இந்தியா, ஜப்பான், ஈரான், மலேசியா முதலிய 20 நாடுகளிலிருந்து வந்த 20 திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவின் போது வெளிப்படையாக காண்பிக்கப்பட உள்ளன.பார்வையாளர்களால் மிகவும் வரவேற்கப்படும் வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பரிசு உள்ளிட்ட பரிசுப் போட்டியில் இவை கலந்துகொள்ள உள்ளன.

பல்வேறு பாணியுடைய இந்த 20 திரைப்படங்களை, இத்திரைப்பட விழாவின் அமைப்புக் குழுவின் 70 வெளிநாட்டுத் திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுத்தனர். jinjibaihua என்ற சீனத் திரைப்பட விழா, சீனத் திரைப்பட துறையின் ஆண்டு விழாவாகும். சீனத் திரைப்படத் துறையினர் சர்வதேசத் துறையினருடன் பரிமாற்றம் மேற்கொள்ளும் நட்புப்பூர்வமான விழாவாகும். இச்சர்வதேசத் திரைப்படப் பொருட்காட்சி ஒத்துழைப்பை முன்னேற்றி, சந்தையை வளப்படுத்தும் என்று இத்திரைப்பட விழாவின் அமைப்புக் குழுவின் இயக்குநர் kangjiangmin நம்பிக்கை தெரிவித்தார்.