மூ மலை பள்ளத்தாக்கு மின்சார நிலையத்துக்கு இசைவான மின்சார ஊடனுப்பு திட்டப்பணி கடந்த 11 ஆண்டுகாலமாகக் கட்டியமைக்கப்பட்டு, இவ்வாண்டின் டிசம்பர் திங்களில் நிறைவேறும் என்று சீனத் தேசிய மின் வலைப்பின்னல் நிறுவனத்தின் பொறுப்பாளர் Liang Xu Ming கூறியுள்ளார். இன்று மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணி அமைந்துள்ள Yi Chang நகரில் நடைபெற்ற சர்வதேச நேரோட்ட மின்சாரம் பயன்படுத்துவோர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் வரை, இத்திட்டப்பணியின் கட்டுமானத்துக்கு சுமார் 4 ஆயிரம் கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதுகெலும்பு திட்டப்பணி நவம்பர் திங்கள் துவக்கத்தில் முழுமையாக நிறைவடைய உள்ளது. அப்போது, மூ மலை பள்ளத்தாக்கு மின்சார ஊடனுப்பு திட்டப்பணி முழுமையாக கட்டி முடிக்கப்படும்.
|