• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 21:49:18    
மூவருக்கு இரண்டு பழங்கள் 1

cri

குங்ஷுன் சியே, தியன் கைச்சியாங், கு யேசு மூவரும் புலியையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமையும் வீரமும் கொண்டவர்கள். ச்சி நாட்டு கோமகன் ஜிங்கிடம் இந்த மூன்று வீரர்களும் பணிபுரிந்தனர்.

ஒரு முறை அமைச்சர் யான்சு இந்த மூவரும் இருந்த இடத்தை கடந்து செல்ல நேர்ந்தது. வயதிலும், அனுபவத்திலும், அரச பதவியிலும் மூத்தவர் என்பதால், தான் வருவதை உணர்த்தும் விதமாய் வேகமாக நடந்தார் யான்சு. பொதுவாக இது போன்ற சான்றோரைக் கண்டால் மரியாதைக்காய் எழுந்து நிற்பது வழமை. ஆனால் யான்சு கண்ணியமாக தனது வருகையை உணர்த்தியபோதும், இந்த மூன்று வீரர்களும், கொஞ்சமும் அசராமல், அவர் வந்ததை கண்டுகொள்ளாமல், எழுந்து நிற்கவும் எண்ணாமல் இருந்தனர்.

யான்சு கோமகன் ஜிங்கை சந்திக்கச் சென்றார்.

கோமகனை பார்த்து பெருந்தகையே, பொதுவாக வலிமையும் வீரமும் கொண்டவர்களை அரச பெருமக்கள் தங்களோடு வைத்திருக்கும்போது, அந்த வீரர்கள் அவர்களுக்கு முழுமையான குடிகளாய், ஆணைக்கு பணிபவர்களாய் இருக்கவேண்டும், மூத்தவர்களைக் கண்டால் உரிய மரியாதை அளிக்க வேன்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உள்ளிருந்தான கலகத்தையும், வெளியிலிருந்தான எதிரிகளின் தாக்குதலையும் அவர்களால் வெல்ல முடியும் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர்களை மேல்தட்டு மக்கள் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமாய் பாராட்ட, கீழ்தட்டு மக்கள் அவர்களது மன வலிமையை எண்ணி பெருமைபடுவர். இதனால்தான் அத்தகைய வீரர்கள் உயர் பதவிகளையும், உயர் வெகுமதியையும் பெறுகின்றனர்.

ஆனால் உங்களிடம் பணிபுரியும்  வீர பராக்கிரமசாலிகள் மூவரும், பணிவு என்றால் என்ன, மரியாதை என்றால் என்ன, ஆனைக்கு இணங்கி நடத்தல் என்றால் என்ன இதையெல்லாம் கொஞ்சமும் அறியாதவர்கள். உள்ளிருந்தான கலகத்தையும், வெளியிலிருந்தான எதிரிகளின் தாக்குதலையும் வெல்ல தகுதியற்றவர்கள். அவர்கள் நமது நாட்டுக்கு அச்சுறுத்தலே ஒழிய பயனில்லை எனவே அவர்களை முதலில் நாட்டை விட்டு விரட்டியடிக்கவேண்டும் என்றார் யான்சு.

யான்சு சொன்னதை பொறுமையாக கேட்ட கோமகன் ஜிங், அமைச்சரே நீங்கள் சொன்னது புரிகிறது. ஆனால் இந்த மூவரையும் அடக்கி ஒடுக்கவது முடியாத ஒரு செயல். தேர்ந்த கொலையாளிகள் கூட இவர்களை கொல்ல வாய்ப்பில்லை என்றார்.வலிமையான எதிரிகளுடன் போரிடத்தான் அவர்களுக்கு தெரியும், மூத்தவர்களுக்கு முதன்மையளிக்கு வழமை அவர்களுக்கு தெரியாது என்று கூறினார்

யான்சு. கோமகனிடம், இந்த மூன்று பராக்கிரமசாலிகளுக்கு 2 பீச் பழங்களை கொடுத்தனுப்ப கோரினார். இந்த பழங்களை கொண்டு சென்றவர் ஒரு குறிப்பையும் கொண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பீச் பழங்களை, உங்களது வெற்றிகள் சாதனைகளுக்கு தகுந்தபடி பிரித்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த குறிப்பு.

பழங்களை பெற்ற அந்த மூன்று பேரும் வியப்படைந்தனர். குங்ஷுன் ஜியே, புன்முறுவலுடன், நம்மை நாமே மதிப்பிட்டுக்கொள்ளும்படியாக, கோமகனை சொல்ல வைத்த அமைச்சர் யான்சு உண்மையிலெயே புத்திசாலிதான் என்றான். இந்த பழங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு மனவலிமை என்றாகிவிடும். ஆனால் நாம் மூவர், பழங்களோ இரண்டு மட்டும். நமது வெற்றிகள், சாதனைகளின் அடிப்படையில் நாம் பழங்களை பிரித்துக்கொள்ளவேண்டும். நான் ஒரு முறை மூன்று வயது காட்டு பன்றியை சண்டையிட்டு வென்றேன், ஒரு முறை அப்போதுதான் குட்டியீன்ற ஒரு பெண்புலியுடன் சண்டையிட்டேன். என் வெற்றிகளின் கணத்தை பார்த்தால் இந்த இரு பழங்களில் ஒன்று எனக்கு சொந்தமானது, நான் யாருக்கு அதில் பங்கு தரத் தேவையில்லை என்று கூறி ஒரு பழத்தை எடுத்துக்கொண்டான்.