• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 14:06:00    
சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தின் ஆடல் குழு

cri

சீன மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் அடங்கிய ஆடல் குழு ஒன்று இருக்கின்றது. இந்த இளைஞர்கள், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வெவ்வேறான துறைகளில் கல்வி பயில்கின்ற போதிலும், சிறுபான்மை தேசிய இன ஆடல் மீதான பொது ஆர்வம் காரணமாக, அவர்கள், ஒன்றிணைந்து, உயிர்த்துடிப்புள்ள இந்த ஆடல் குழுவை உருவாக்கினர். இன்றைய நிகழ்ச்சியில், இந்த ஆடல் குழு பற்றிய கதை சொல்கிறோம்.
இந்த ஆடல் குழுவின் உறுப்பினர்களில், 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர், இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிறுபான்மைத் தேசிய இன மாணவர்கள் ஆவர். ஆடல் குழுவின் தற்போதைய தலைவரும், கற்பித்தல் துறையின் மாணவருமான Tan Rui கூறியதாவது:

"எங்கள் ஆடல் குழு, நிறுவப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இளங்கலை மாணவர்களும், முதுகலை மாணவர்களும் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். ஆடல் குழு உறுப்பினர்களில் உய்கூர், மங்கோலியா, திபெத், யி, தெய், ஹானி, குவெய் உள்ளிட்ட இனத்தவர்கள் அடங்குவர். சாதாரண பல்கலைக்கழக மாணவர்களாகிய அவர்கள், ஆடலை நேசிப்பதால், இக்குழுவில் சேர்ந்தனர்" என்றார்.

Tan Rui, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், ஹானி இனத்தைச் சேர்ந்தவராவார். 11 ஆண்டுகளுக்கு முன், இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற Mao Lei என்ற பெயர் கொண்ட யீ இன மாணவர், இந்த ஆடல் குழுவை உருவாக்கினார். அப்போது, கலை நிகழ்ச்சிக்கான பயிற்சி இடம் ஏதும் இல்லை.

தற்போது, இந்த ஆடல் குழுவுக்கு பயிற்சி இடம் கிடைத்துள்ளது. பெய்சிங்கில் உள்ள உயர் கல்வி நிலையங்களின் ஆடல் குழுக்களில் இந்த ஆடல் குழுவின் ஆடல் படைப்புகள் உயர் தரமானவை. யுன்னான், திபெத், ஹாங்காங், மக்கெள முதலிய பிரதேசங்களுக்கு ஆடல் குழு பயணமாகச் சென்று, அரங்கேற்றங்களை நடத்தியுள்ளது. கடந்த மே திங்களில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம், தாய்நாட்டுக்கு திரும்பிய 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அழைப்பின் பேரில், இந்த ஆடல் குழு, ஹாங்காங்கின் உயர் கல்வி நிலையங்களிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் ஒரு வாரம் அரங்கேற்றியது. ஹாங்காங்கில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வண்ணமயமான சீனச் சிறுபான்மைத் தேசிய இன ஆடல்களையும், நவீன ஆடல்களையும், இக்குழு அரங்கேற்றியது. குவான் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த குவெய் இன மாணவி Qin Shan பேசுகையில், சிறுபான்மைத் தேசிய இன நடையுடை பாவனைகளை வெளிப்படுத்தும் படைப்புகள், இந்த ஆடல் குழுவில், மேம்பாட்டுடைய படைப்புகளாகும். "சீனக் குடும்பம்" என்னும் ஆடலை இந்த ஆடல் குழு உறுப்பினர்கள் 11 ஆண்டுகளாக அரங்கேற்றி வருகின்றனர். இந்த ஆடலில் சீனாவின் பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல் கலைகள் செறிந்து பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இது, ஆடல் குழுவின் பிரதிநிதிப் படைப்புகளில் ஒன்றாகும். இது மட்டுமல்ல, மத்திய சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தில், பல்வேறு தேசிய இன இளைஞர்கள் ஒன்றுபடும் சின்னமாக இந்த ஆடல் மாறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இதில் பங்கேற்று நடனமாடி வரும் ஹானி இன மாணவர் Huang Ming கூறியதாவது:

"'சீனக் குடும்பம்' என்ற ஆடலில், சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல்கள் காணப்படலாம். பெய்சிங் மாநகரின் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாவது கலை நிகழ்ச்சி அரங்கேற்றத்தில் இந்த ஆடலை ஆடினோம். எங்கள் செறிவான உணர்வு வெளிப்பாடு பெருமளவில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி அரங்கேற்றத்தில் இந்த ஆடலுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது." என்றார், அவர்.
ஆடல் குழு உறுப்பினர்கள், சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, திபெத், யுன்னான், குவாங் சி முதலிய இடங்களின் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். பண்டைக்காலம் தொட்டு, இவ்வினத்தவர்கள், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களில் பலர், ஆடல் பாடலுடன் வளர்ந்துள்ளனர். Huang Ming கூறியதாவது:

"என் ஊரில், பரவலான ஒரு கூற்று உண்டு. 'ஒரு குழந்தை பேச முடியும் போது, பாட முடியும். நடக்க முடியும் போது, ஆட முடியும்' என்பதாகும். என் ஊரில், சிறுபான்மைத் தேசிய இன மக்கள், ஆடல் பாடல் மீது கொண்டுள்ள அன்பை இது வெளிப்படுத்துகின்றது" என்றார், அவர்.

Huang Ming, நகரில் வாழ்ந்திருந்தார். இருந்த போதிலும், சிறு வயதில் குழந்தை கேளிக்கையகத்தில், தை இனம், ஹானி இனம் முதலியவற்றின் சிறுபான்மைத் தேசிய இன ஆடல்களை அவர் கற்றுக்கொண்டார். குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பிறந்த குவெய் இன மாணவி Tan Shan. பொறுத்த வரை, "பாடல் கடல்" என அழைக்கப்படும் சுவாங் இன மலை கிராம சூழ்நிலையின் காரணமாக, சிறு வயதிலிருந்தே, சிறுபான்மைத் தேசிய இன பண்பாட்டை அவர் மிகவும் விரும்புகின்றார். அவர் கூறியதாவது:

"சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, ஆண்டுதோறும் மார்ச் திங்கள் 3ஆம் நாள், சுவாங், மியெள, துங் ஆகிய இனங்கள் வசிக்கும் மலைக் கிராமங்களில், இளைஞர்களும், இளம் பெண்களும், மலையின் இரு பக்கங்களில், ஒருவரை நோக்கி ஒருவர் பாடுகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாடு, ஆழ்ந்த அடிப்படை தன்மை கொண்டுள்ளது. ஆடல், மக்களின் உணர்வை வெளிப்படுத்த முடியும் என்று கருதுகின்றேன்" என்றார், அவர்.
விடுமுறை நாட்களில், ஆடல் குழு உறுப்பினர்கள், தத்தமது ஊருக்குத் திரும்பிய பின், பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆடல்களில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆடல் அசைவுகள், பாணி, சிறுபான்மைத் தேசிய இன ஆடைகள் முதலியவை. பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிய பின், ஆடல் பயிற்சி செய்யும் போது, இவை, முக்கிய வளங்களாக பயன்படுகின்றன.

ஆடல் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஆடல் துறையில் கல்வி பயிலவில்லை. ஆடல் குழுவில் சேர்ந்து, சிறப்பு ஆடல் பயிற்சியில் ஈடுபட்டப் பிறகு, பல மாணவர்கள், பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதிலும், கடினமான பயிற்சியினால், வண்ணமயமான சிறுபான்மைத் தேசிய இன ஆடல் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. Sangji Dongzhi என்னும் திபெத் இன இளைஞர் கூறியதாவது: 

"மத்திய சிறுபான்மை தேசிய இனப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற கடந்த 7 ஆண்டுகளில், எனக்கு கிடைத்த அனைத்து பெருமையும், வாய்ப்புகளும், திறமைகளும், இக்குழுவிலுள்ள என் சக மாணவர்களுடன் பிரிக்கப்பட முடியாதவை. எனது வாழ்நாளில், இந்த அருமையான நேரத்தை மறக்க போவதில்லை என கருதுகின்றேன்" என்றார், அவர்.