• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 14:17:17    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றியச் செய்திகள்

cri

கடந்த 7 ஆண்டுகளில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு, சிறப்பு, உயர் நிலை என்ற குறிக்கோளுக்கு இணங்க, புதிய பெய்ஜிங், புதிய ஒலிம்பிக் என்ற நெடுநோக்கு திட்டத்தையும், பசுமை, அறிவியல், மானுடவியல் ஒலிம்பிக் போட்டி என்ற கருத்துகளையும் நனவாக்க, பல்வேறு ஆயத்த பணிகள், திட்டப்படி, நடைபெற்று வருகின்றன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் துணை செயல் தலைவர் liujingmin அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான 37 விளையாட்டரங்குகளில், 27 விளையாட்டரங்குகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. துவக்க விழா நடைபெறும். தேசிய விளையாட்டரங்கு அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் கட்டிமுடிக்கப்படும். இதர விளையாட்டரங்குகளின், கட்டுமானப்பணி திட்டப்படி முடிவடையும் என்று அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான துவக்க விழா பற்றிய திட்டம், உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீப தொடரோட்ட பணியும், முன்னேற்றும் பெற்று வருகின்றது என்று அவர் கூறினார்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான சீனப் பிரதிநிதிக் குழுவில் சுமார் 570 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம்பெறுவர். இது, சீன வரலாற்றில் மிகப் பெருமளவிலான ஒலிம்பிக் போட்டிப் பிரதிநிதிக் குழுவாகும். சீனத் தேசிய விளையாட்டு ஆணையத் தலைவர் லியுபெங் நேற்று பெய்சிஙகில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

17ம் நாள் வரை, பெயர் பதிவு செய்துள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை, 7 இலட்சத்தை தாண்டியுள்ளது. நகரங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 20 ஆயிரம் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழுவின் தன்னார்வ தொண்டர்கள் துறை இன்று தெரிவித்தது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு, 70 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் தேவை. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேவைப்படும் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரமாகும்.

அறிவுசார் சொத்துரிமை துறையில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீரான சூழலை, சீனாவால் வழங்க முடியும் என்று, சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகத்தின் தலைவர் தியன் லீ புஃ கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த பெய்ஜிங் வெற்றிகரமாக விண்ணப்பித்த பிறகு, சீன அரசவை, ஒலிம்பிக் சின்னங்கள் பாதுகாப்பு சட்டவிதிகளை வகுத்து வெளியிட்டுள்ளது. சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகம், சீனச் சுங்கத்துறை தலைமை பணியகம், தேசிய தொழில் மற்றும் வணிக நிர்வாக தலைமை பணியகம் உள்ளிட்ட வாரியங்கள் தத்தமது விதிகளை வகுத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.