கண்ணைக் கவரும் ஹுவாங் ஷான் மலை(அ)
cri
சீனாவின் கிழக்கே அன் ஹுவே மாநிலத்திலுள்ள ஹுவாங் ஷான் மலை, சீனாவின் புகழ்மிக பெற்ற கண்கவர் வனப்புகளில் ஒன்றாகும். கவர்ச்சியான பாறை முகடுகள், பல வடிவப் பைன் மரங்கள், தெளிந்த மலைஊற்றுகள், முகில் கடல்கள் முதலிய மலைக்காட்சி அற்புதங்கள் அனைத்தும், அங்கே செறிந்து கிடக்கின்றன. எட்டம் நூற்றாண்டுக் கற்பனைக் கவி்ஞர் லி பெய், ஹுவாங் ஷான் மலையை "தங்க மலர்ச்செடி"களுக்கு ஒப்பிட்டார். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல யாத்திரிகரும் புவியியல் வல்லுநருமான ஷீ ஸி கெ அதை "சீனாவின் புகழ்மிக்க மலைகளில் முதன்மையானது" என வருணித்தார். சமகால கவிஞர் கோ மோ றோ, ஹுவாங் ஷான் வனப்புகளை "வானுலகின் கீழ் வசீகரமிக்கவை"என சித்தரித்தார். ஹுவாங் ஷானைச் சுற்றிப் பார்வையிட பல நாட்கள் தேவைப்படும். நமது தங்குமிடம், ஹுவாங் ஷான் தங்கும் அறைகளோடு அமைந்த உணவகம் ஆகும். சுற்றுச்சூழலைக் கண்டுகளிப்பதற்கு வசதியான ஓரிடத்தில், செங்குத்தான ஊதா முகில் சிகரத்துக்கு எதிரே, தங்கும் அறைகளோடு அமைந்த அந்த உணவகம் அமைந்துள்ளது, கொஞ்சம் மேலே பார்த்தால், பீச் மலர் அருவி, குங்கும் ஆற்றைச் சந்திக்கின்ற இயற்கை ஏழிலை காணலாம்.. ஹீவாங் ஷான் தங்கும் அறைகளோடு அமைந்த உணவகத்தில் மன அமைதி தரும் சிறப்பியல்பு யாதெனில் வெப்ப நீரூற்றுக் குளியல் ஆகும். பீச் மலர் அருவியின் அருகேயுள்ள ஒரு நீர் நிலையிலும், இத்தகைய வெப்ப நீரோடையைக் காணமுடிகிறது. அங்குள்ள ஹீவாங் ஷான் சிகரங்கள் மேலும் மிக கவர்ச்சிகரமானவை. "பாசிமணித்திரை விதானத்தை அடையாவிட்டால், மலையின் பல்வண்ண அழகை அனுபவிப்பது சாத்தியமாகாது. செர்க்கத்தின் தலைநகர் என்ற தியன் டுவில் ஏறாவிட்டால், உங்கள் பயணம், பயன் அற்றது"என்று கிராமியக் கூற்றும் தெரிவிக்கின்றது. மேலே செல்லும் பாதையானது அழகிய பல காட்சிகளைக் கண்களுக்கு விருந்தாக்குகிறது. அரைவழித் தூரத்திலுள்ள மடாலயத்திலிருந்து பார்த்தால், தியன் டு சிகரத்தில் பாறை ஒன்று இருப்பதைக் காணலாம். பாசிமணித்திரை நிதானத்தின் முன்னே இருக்கும் விருந்தினரை வரவேற்று விடையளிக்கும் பைன் மரங்கள், சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. ஒரு பாறை பிளவிலிருந்து வளர்ந்துள்ள இந்த பைன் மரத்தின் நீண்ட கிளைகள், மலை ஏறிவரும் விருந்தினரை வரவேற்கும் கைகள் போல் காட்சியளிக்கின்றன. ஹுங்வா ஷான் பக்கப்பாறைகள், எவ்வளவு செங்குத்தாக உள்ளனவோ, அதன் இடுக்குகளில் வளரும் பைன் மரங்களின் வடிவங்களும், அவ்வளவு அசாதாரணமானவையாகத் தோன்றுகின்றன.
பாசிமணித்திரை விதானம், கடல்மட்டத்திலிருந்து 1680 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதை, "சுவர்க்கத்தின் பாசிமணித்திரை"என்றும் கூறுவது வழக்கம். 1810 மீட்டர் உயரமான தியன்டு முகடு, மிக அற்புதமான ஒன்றாகும். 70 ஆண்டுகளுக்கு முன்னே அதன் உச்சியை அடையத்தவறிய ஒரு பயணி, பின்வரும் கவிதை அடிகளை எழுதினார். "தியன் டு சிகரத்தை சூழ்ந்துள்ள முகில் கடல்களைக் காண, நாரையின் முதுகிலே பறற்து செல்லும் அந்நாள், எப்போது வரும் என ஏங்குகின்றேன்"என்பது, அவ்வடிகளாகும்.
|
|