• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-25 14:23:16    
உள்மங்கோலியாவிலுள்ள குவாங் சூங் கோயில்

cri

சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஹேலன் மலை அடிவராரத்தில், நீண்ட வரலாறுடைய திபெத் புத்த மதக் கோயிலான குவாங் சூங் கோயில் அமைந்துள்ளது.


உள்மங்கோலியாவின் அலாசானைச் சேர்ந்த குவாங் சூங் கோயில், உள்ளூர் மக்களால் தெற்கு கோயிலாக அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் சுற்றுப்புறத்தில், மரங்களும் மலர்களும் புற்களும் வளர்ந்து காணப்படுகின்றன. காடுகளில் பறவைகளின் ஒலியைக் கேட்கலாம். கோயிலின் தென்பகுதியில், தூய்மையான சிறு நதி உள்ளது. உலிச்சி என்னும் லாமா, எமது செய்தியாளர்களை வரவேற்க வெளியே வந்தார். அவர் குவாங் சூங் கோயிலில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். இக்கோயிலின் கட்டிடங்களை, எமது செய்தியாளரிடம் அவர் அறிமுகப்படுத்தி கூறியதாவது:

 
பெரிய திருமறை மாளிகை, சிறிய திருமறை மாளிகை, மிலெ புத்தர் மாளிகை, மருத்துவ மாளிகை, மிசுங் மாளிகை உள்ளிட்ட 20க்கு அதிகமான மாளிகைகள், இக்கோயிலில் உள்ளன. தவிர, பெரிய திருமறை மாளிகையில், சிகியாமுனி முதலிய புத்த சிலைகள் வழிப்பாடுச் செய்யப்டுகின்றன என்றார் அவர்.
குவாங் சுங் கோயில், 1758ம் ஆண்டில் கட்டியமைக்கப்படத் தொடங்கியது. கோயிலின் இரு பக்க கற்சுவர்களில் பல வண்ண புத்தர் சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை, உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில் மிகப் பெரிய கல் புத்தர் சிலைக் குழுவாக அழைக்கப்படலாம். இக்கோயிலைச் சுற்றியுள்ள எட்டு மலைச் சிகரங்கள் உருவாகிய வடிவம், தாமரைப் பூ இருக்கை போன்றது. குவாங் சுங் கோயில், இவ்விருக்கையின் மையத்தில் அமைந்துள்ளது.

 
எமது செய்தியாளர்கள் கோயிலைச் சென்றடைந்த போது, லாமாக்கள் திருமறையை ஓதிக்கொண்டனர். முதியோர் இளைஞர்கள் அனைவரும் மிகவும் கண்ணும் கருத்துமாக ஓதிக்கொண்டுள்ளனர்.
ஆறாவது தலாய் லாமாவின் உடல், இக்கோயிலில் வழிபாடு செய்யப்பட்டதால், உள்ளூர் மக்களின் மனதில், இவ்விடம், புனித இடமாக கருதப்படுகிறது. குவாங் சுங் கோயிலின் துணைத் தலைவர் சுயிலாது கூறியதாவது:
உள்மங்கோலியாவின் மேற்கு பகுதியில், இக்கோயில் ஒப்பீட்டளவில் உயர்ந்த புகழையும் தகுநிலையையும் கொண்டுள்ளது. இது, திபெத் மதத்துறையின் தலைவர் ஆறாவது தலாய் லாமாவுடன் தொடர்புடையது என்பது, அதற்கு காரணமாகும் என்றார் அவர்.


ஆறாவது தலாய் லாமா சாங்யாங்காசுவோ, 1716ம் ஆண்டில் அலசான் பிரதேசத்தின் ஒரு ஆயர் குடும்பத்துக்கு வந்து, இவ்வாயரின் மகனுக்கு, புத்தயியலை கற்றுக்கொடுத்தார். பல ஆண்டுகளுக்குப் பின், சாங்யாங்காசுவோ, அலாசானில் மரணமடைந்தார். அவரை தினைவு செய்யும் வகையில், அருடைய உடலை இக்கோயிலில் அடக்கம் செய்துள்ளனர். இதுவரை, அவர் பயன்படுத்திய திருமறை நூல்கள் முதலிய அரிய வரலாற்றுத் தொல் பொருட்கள் குவாங் சுங் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.