மங்கோலிய இன மக்கள், தங்களை மங்கோலியர் என அழைக்கின்றனர். மங்கோலியா என்பது, எப்போதும் நெருங்கும் தீ என பொருள்படுகிறது. இதன் மற்றொரு பெயர், குதிரை முதுகில் வாழும் இனம் என்பதாகும்.
மங்கோலிய இன மக்கள், பெரும்பாலோர், மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். ஏனையவர், சின்கியாங்,சிங்காய், கான்சு, லியோநின், ஜீலின், வெலுங்கியாங் முதலிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 48 லட்சத்து 7 ஆயிரமாகும்.

மங்கோலிய இனம், நீண்டகால வரலாறு உடையது. தற்போது, 8 தன்னாட்சி சோகளும் மாவட்டங்களும் நிறுவப்பட்டுள்ளன.
கால்நடை வளர்ப்புத் தொழில், நீண்டகாலமாக மங்கோலிய மக்கள் சார்ந்திருந்து வளரும் முக்கிய தொழிலாகும். தவிரவும், பதனீட்டுத் தொழில்கள், வேளாண்மை மற்றும் தொழிற்துறைகளில் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர். மங்கோலிய மக்கள் ஆடல், பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களின் நாட்டுப்புற பாடல்கள், நீள் ராகம் குறுகிய ராகம் என்ற இரு வகைகளாகும்.

மங்கோலிய இனத்துக்கு சொந்த மொழி உண்டு. இது, Artic மொழிக் குடும்பத்தின் மங்கோலிய கிளையைச் சேர்ந்தது. இம்மொழியிலான வெளியீடு, வானொலி, நாடகம், திரைப்படம் ஆகிய இலட்சியங்கள் பெரிதும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. "மங்கோலியாவின் ரகசிய வரலாறு" உள்ளிட்ட சில படைப்புகள் யுனேஸ்கோவால் உலகில் புகழ் பெற்ற மரபுச் செல்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சியாங்கர் என்ற புகழ் பெற்ற வீரக் காவியம், சீனாவின் மூன்று மிக பெரிய வீரர் காவியங்களில் ஒன்றாகும்.
ஒருவரைப் சந்திக்கும் போது, வணக்கம் சொல்ல வேண்டும். உபசரிப்பவர் வழங்கும் பால் அல்லது தேநீரை அருந்த வேண்டும். பால் சிற்றுண்டியைச் சாப்பிட வேண்டும். இல்லையேன்றால் உபசரிப்பவருக்கு அவமதிப்பு என்பதாகும். தவிர, ha da வழங்குவதும் மங்கோலிய மக்களின் மிக உயர்ந்த உபசரிப்பு பண்புகளாகும்.

வெள்ளை விழா, ao bao வழிப்பாடு, na da mu முதலியவை மங்கோலிய மக்களின் பரம்பரை விழாக்களாகும். அவற்றில் வெள்ளை விழா, ஹான் இனத்தின் வசந்த விழாவைப் போல், மிக கோலாகலமானது. இவ்விழா, வெள்ளை நிலாவையும் குறிப்பிடுவதோடு இதன் பெயர், பால் உணவின் வெள்ளை வண்ணத்துடன் தொடர்பு கொண்டு இருப்பதால், மங்களம் என்ற பொருளையும் தருகிறது.
மங்கோலிய மக்கள் பெரும்பலோர் மதுபானம் அருந்துவதில் வல்லவர்கள். விழாக்களின் போதும் விருந்துகளிலும் நண்பர்கள் ஒன்று கூடும் போதும் அவர்கள் அதிகமான மதுபானம் அருந்துவது வழக்கம்.

|