• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-26 09:30:54    
உலக கோப்பை கால்பந்து போட்டித் தகுதிக்கான தேர்வாட்டம்

cri

2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய மண்டல தகுதிக்கான தேர்வாட்டம் அக்டோபர் திங்கள் 21ம் நாள் சீனாவின் Guang Dong மாநிலத்தில் நடைபெற்றது. சீன அணியும் மியன்மார் அணியும் மோதின. சீன அணியின் வீரர்கள், Qu Bo, Du Zhenyu, Yang Lin, Liu Jian, Li Jinyu, Li Weifeng ஆகியோர் அடித்த 7 கோல்களை கொண்டு, மியன்மார் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் சீன அணி தோற்கடித்தது. சீன அணி இத்தகுதி ஆட்டத்தில் முதல் வெற்றி பெற்றது. இரு தரப்பின் அடுத்த ஆட்டம் 28ம் நாள் கோலாலம்பூரிலில் நடைபெற உள்ளது.

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் இறுதி போட்டி அக்டோபர் திங்கள் 22ம் நாள் பிரேசிலில் முடிவடைந்தது. இப்போட்டியில், Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen, இவ்வாண்டிலான தனது 6வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் பிரேசில் வீரர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso மூன்றாவது இடம் பிடித்தார். Ferrari அணியின் Raikkonen 110 புள்ளிகளைத் திரட்டி, ஆண்டுக்கான சாம்பியன்பட்டத்தை முதன்முறையாக பெற்றார். இப்போட்டிக்குப் பின், வீரர்கள் தரவரிசையில் Raikkonen Hamilton, Alonso, ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு, சிறப்பு, உயர் நிலை என்ற குறிக்கோளுக்கு இணங்க, புதிய பெய்ஜிங், புதிய ஒலிம்பிக் என்ற நெடுநோக்கு திட்டத்தையும், பசுமை, அறிவியல், மானுடவியல் ஒலிம்பிக் போட்டி என்ற கருத்துகளையும் நனவாக்க, பல்வேறு ஆயத்த பணிகள், திட்டப்படி, நடைபெற்று வருகின்றன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் துணை செயல் தலைவர் liujingmin அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான 37 விளையாட்டரங்குகளில், 27 விளையாட்டரங்குகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. துவக்க விழா நடைபெறும். தேசிய விளையாட்டரங்கு அடுத்த ஆண்டு மார்ச் திங்கள் கட்டிமுடிக்கப்படும். இதர விளையாட்டரங்குகளின், கட்டுமானப்பணி திட்டப்படி முடிவடையும் என்று அவர் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான துவக்க விழா பற்றிய திட்டம், உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீப தொடரோட்ட பணியும், முன்னேற்றும் பெற்று வருகின்றது என்று அவர் கூறினார்.