• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-29 17:36:17    
சீனாவின் கள்ளப்பதிப்பு எதிர்ப்பு பற்றிய புகார் மையம்

cri

அண்மையில், சீனத் தேசிய பதிப்புரிமைப் பணியகம் பெய்ஜிங்கில் கள்ளப்பதிப்பு எதிர்ப்புப் புகார் மையத்தை நிறுவியது. பதிப்புரிமை மீறல் கள்ளப்பதிப்புச் செயல் பற்றி பொது மக்கள் செய்யும் புகார்களை இது ஏற்றுக்கொள்கிறது. நாட்டின் செயல்களால் சமூகத்தின் பல்வேறு துறையினர் கள்ளப்பதிப்பை எதிர்ப்பதற்கு வழிகாட்ட வேண்டும் என்பது முக்கியமானது என்று சீனத் தேசிய செய்தி வெளியீட்டுப் பணியகத்தின் தலைமை அலுவலகத் தலைவரும், தேசிய பதிப்புரிமைப் பணியகத் தலைவருமான liubinjie தெரிவித்தார்.

சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமைப் பணி அலுவலகம், தேசிய செய்தி வெளியீட்டுப் பணியகம், தேசிய பதிப்புரிமைப் பணியகம், சீனப் பதிப்புரிமைப் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் அதிகாரிகளும், நாட்டுத் தொடர்புடைய படைப்புரிமைக் குழுமத்தின் மேலாண்மை அமைப்புப் பிரதிநிதிகளும் இந்த புகார் மையத்தின் முதலிய துவக்க விழாவில் கலந்துகொண்டனர். இம்மையம் நிறுவுவியமை, மதிப்புரிமை மீறல் மற்றும் கள்ளப்பதிப்பைத் தாக்கிய சீன அரசின் மனவுறுதியை வெளிப்படுத்துகிறது என்று சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பணி அலுவலகத்தின் அதிகாரி xiangxin அம்மையார் தெரிவித்தார். இப்பணி, சீன அரசின் 2007ம் ஆண்டு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டங்களில் ஒன்றாகும். கள்ளப்பதிப்பு ஒடுக்கி, சட்டப்பூர்வ படைப்புரிமையினரின் நலனைப் பாதுகாக்கும் சீன அரசின் மன உறுதி மற்றும் நிலைப்பாட்டை இம்மையத்தை நிறுவியமை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

சீன அரசு கள்ளப்பதிப்பு எதிர்ப்பு மையத்தை நிறுவுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இது பொது மக்களின் ஊக்கத்தை அதிகரித்து, கள்ளப்பதிப்பை ஆக்கப்பூர்வமாகப் புகார் செய்ய உதவும். அத்துடன், கள்ளப்பதிப்பு ஒரு குற்றமாகும் என்ற முக்கிய தகவல் சமூகத்துக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம், கள்ளப்பதிப்புக் குற்றச் செயல்களை மேலும் பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தலாம் என்று liubinjie தெரிவித்தார்.

நண்பர்களே, சீனாவின் கள்ளப்பதிப்பு எதிர்ப்பு பற்றிய புகார் மையம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.