• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-29 13:00:25    
கல்வியா? செல்வமா? உடல் நலமா?

cri

கல்வியா? செல்வமா? வீரமா? இம்மூன்றில் எது சிறந்தது என்பதனை விவாதித்தறிவது முற்கால நிலையாக இருந்தது. கல்வியா? வருமானமா? உடல்நலமா? என விவாதித்தறிவது இக்கால நிலை என்றாகிவிட்டது. "கல்வி கண் போன்றது, கடமை பொன் போன்றது" என்பர் சான்றோர். கல்வியே அழியா செல்வம், மற்றவை அனைத்தும் செல்வமே அல்ல என பொருள்பட

கேடில் விழுச்செல்வம் கல்வியொருவர்க்கு

மாடல்ல மற்றை யவை

என்றும்

கற்றவர்களே கண்களுடையவர்கள், கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்கள் என பொருள் படும்படி

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். என்றும்வள்ளுவர் கல்விச்செல்வத்தை புகழ்கிறார்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பழமொழி கடல் கடந்து சென்றாவது பொருட்செல்வத்தை ஈட்ட வேண்டும் என அச்செல்வத்தின் தேடலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எவ்வளவு தான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் உடல்நலம் இல்லாவிட்டால் பயனேது.

கல்விக்கும், செல்வத்திற்கும் இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? இத்தகைய முக்கியத்துவம் பெற அவை என்னதான் சாதித்து விடுகின்றன? என பல கேள்விகள் நமது உள்ளத்தில் எழலாம். நமது வாழ்க்கை தகுநிலை நாம் கொண்டிருக்கும் பொருட்செல்வத்தின் அடிப்படையில் அமைகிறது என்பதை பலர் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் பொருட்செல்வம் தான் வாழ்வுக்கு அடிப்படை என்பதை மறுப்பார்கள். ஆனால் நாம் உடைமையாக கொண்டிருக்கும் பொருட்செல்வத்தின் அடிப்படையில் தான் சமூகளவில் ஒருவகை மதிப்பை பெறுகிறோம் என்பது முற்றிலும் பொய் அல்ல.

கல்வியும், செல்வமும் நமது வாழ்வின் பல்வேறு நிலைகளில் தங்களது பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. நமது உடல் நலத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது ஆய்வுகள் சுட்டிக்காட்டும் ஆச்சரியமான உண்மை.

உயர்க்கல்வி கற்றவர்கள் அதிகமாக தீராத நோயாளிகளாகவோ அல்லது உறுப்பு செயலிழப்புகள் பெறுபவர்களாகவோ மாறுவது குறைவு. ஆனால் அவர்கள் ஈட்டுகின்ற பணத்தின்; அளவு, அவர்கள் அந்நோயில் நீடித்திருப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உடல்நலத்தை மேம்படுத்த பயன்மிக்க ஒரு கொள்கைமுறை உயர்கல்வி பெறுவதை எளிதாக்குவதே என அவ்வாய்வை வழிநடத்திய விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழக முனைவர் பமிலா ஹொர்டு "ரியூட்டர்ஸ் ஹெல்த்" செய்தியில் கூறினார்.

அதிகமாக கற்றவர்கள் உடல்பயிற்சி செய்து ஆரோக்கியமான உடல் எடை மற்றும் உணவு கட்டுப்பாட்டை தொடர்வார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஹொர்டு அம்மையார், மக்கள் உடல் எடை குறைப்பதிலும், உடல் பயிற்சி செய்வதிலும் முழுக்கவனம் செலுத்துவதைவிட முன்னாலேயே வழக்கமான மேலாண்மை ஆக்கங்களில் மக்களின் உடல்நல விளைவுகளை மேம்படுத்த உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என விளக்குகிறார்.

சமூக பொருளாதார நிலை மற்றும் உடல்நலம் பற்றிய பல ஆய்வுகள் சமூக தகுநிலையையும், உடல் நலத்தையும் தனித்தனியாக அணுகியுள்ளதை ஹார்டு அம்மையாரும் அவரது சகாக்களும் குறிப்பிட்டு காட்டுகின்றனர். சமூக பொருளாதார தகுநிலை உடல் நலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நன்றாக தெரிந்து கொள்வதற்கு ஒருவர் பெற்ற கல்விநிலை மற்றும் வருமானத்தின் தனிப்பட்ட பாதிப்புக்களை அவர்கள் அறிய விரும்பினர். இதற்கு 8,287 ஆண்களையும், பெண்களையும் 1986 ஆம் ஆண்டிலிருந்து 2000-2001 ஆண்டு வரை கண்காணித்தனர். உடல் நலத்தை "மொத்த அமைப்பாக" ஆய்வு செய்யாமல் செயலிழப்பு பலவீனங்களின் தொடக்கம் மற்றும் தீராத நோய், இவ்விரண்டின் வளர்ச்சி மற்றும் இறப்பு ஆகியவற்றை கண்காணித்தனர்.

கல்விநிலைக்கும் மற்றும் வருமானத்திற்கும் தொடர்பு இருந்தாலும் தீராத நோய் அல்லது செயலிழப்புகளை ஒருவருடைய கல்விநிலை மட்டுமே நிர்ணயிப்பதை அறியவந்தனர். கல்லூரி படிப்பு முடிக்காத உயர்க்கல்வி பட்டதாரிகளில் 61 விழுக்காட்டினர் அதே வயது கொண்ட கல்லூரி படிப்பு பெற்றவர்களை விட அதிகமாக செயலிழப்பு பெறும் உயர் ஆபத்தை கொண்டிருந்தனர். அதேவேளையில், உயர்க்கல்வி பெறாதவர்கள் கல்லூரி பட்டதாரிகளை விட இரட்டிப்பான செயலிழப்பு பலவீனங்களை வளர்த்துக் கொள்பவர்களாக இருந்தனர். இதன் மூலம் தீராத உடல்நலக்குறைவு பெறுவதற்கும் பெற்றக்கல்விக்கும் இடையிலான தொடர்பு தெளிவானது.

உயர்க்கல்வி பெற்றதலிருந்து ஈட்டப்படும் பொருளாதார வசதிகள் நோயை தள்ளிப்போடுவதோடு, சிலருடைய வாழ்வில் இவ்வாறு தள்ளிப்போடப்படுவது கடைசி காலம் வரை நிறைவேறுகிறது என்று ஹொர்டு மற்றும் அவரது உடன் ஆய்வாளர்கள் "உடல் நலம் மற்றும் சமூக நடத்தை" என்ற இதழில் எழுதியுள்ளனர். நோயாளிகளான மக்கள் மேலும் நலிவடைவதிலோ அல்லது இறப்பதிலோ ஒருவருடைய கல்விநிலை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் தீராத நோய் பெறுவார்களா? அந்நோய் மேலும் அதிகமாகுமா? மற்றும் ஆய்வுக்காலங்களில் இறப்பார்களா? என்பதனைத்தையும் அவரவர் வருமானம் கணித்ததை ஆய்வாளர்கள் தெரிந்து கொண்டனர்.

எடுத்துக்காட்டாக, வருடத்திற்கு 10 ஆயிரம் டாலர் வருவாய் பெறும் நோயாளர்கள் அல்லது உடலுறுப்பு செயலிழந்தவர்கள், வருடத்திற்கு 30 ஆயிரம் அல்லது அதற்குமேல் பெற்றவர்களை விட மூன்று மடங்கு மேலானவர்களின் நோய் இன்னும் அதிகமாகி உடல்நலம் மோசமாவதை அறியவந்தனர்.

ஏழைகள் மோசமான உறைவிடங்களில் வாழ்வதையும், ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளுவதில் சந்திக்கும் கடினநிலைகளையும், சுகாதார நலன்கள் பெறுவதிலான சிரமங்களையும் எடுத்துக்கூறிய ஹொர்டு அம்மையார் இக்கண்டுபிடிப்புகள் "வறுமை, சுகாதாரத்தில் எதிர்மறை விளைவுகளை கொணரும்" என்பதை காட்டும் பாதை என்றும், வறுமை உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்ற மனஅழுத்த நிலைகளை வளர்க்கின்றது என்றும் கூறுகிறார். "ஆரோக்கியமாக வாழ மக்கள் என்ன செய்ய வேண்டும் என நமக்கு ஏற்கெனவே தெரியும். மக்களின் உடல்நலம் மேம்பட எவ்வகை அமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை பற்றியே அதிகமாக பேசுகிறோம்" என ஹொர்டு அம்மையார் தெரிவிக்கிறார்.

கல்வியும், கல்வி நிலையால் ஈட்டப்படும் வருமானமும் உடல்நலத்தில் இவ்வகை ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது புதுமையான கருத்தாகும். உடல்நலம் பேணுதல் என்பது பெற்றக் கல்விநிலையில் அடங்கியுள்ளது என்பதை இவ்வாய்வு சுட்டுகிறதல்வா? அப்படியானால் அடிப்படை கல்விக்கே சிரமப்படும் சமுதாயம் எவ்வகை நலவாழ்வை தான் கொண்டிருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் உயர்க்கல்வி பெற பாடுபடுவதற்கும், அக்கல்வி நல்ல வருமானத்தை ஈட்டித்தர தகுந்த வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் செய்ய வேண்டிய அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஒவ்வொருவரின் உடல் நலத்தோடும் சம்பந்தப்பட்டதாகும் என்பது வெளிப்படையாகியுள்ளது.

"ஆமாம்.

அகன்ற அண்டத்திலே,

காணும், கிடைக்கும் அறிவாற்றல்கள் யாவும்

மனிதன் வாழ, அதிக நாள் வாழ,

மானுடம் மிளிர

வழிச்செய்யாவிட்டால்

பயனேது"