• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-29 20:37:28    
F1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் இறுதி போட்டி அக்டோபர் திங்கள் 22ம் நாள் பிரேசிலில் முடிவடைந்தது. இப்போட்டியில், Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen, இவ்வாண்டிலான தனது 6வது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அவரது அணித் தோழர் பிரேசில் வீரர் மாசா இரண்டாவது இடத்தைப் பெற்றார். Mclaren அணியின் ஸ்பெயின் வீரர் Alonso மூன்றாவது இடம் பிடித்தார். Ferrari அணியின் Raikkonen 110 புள்ளிகளைத் திரட்டி, ஆண்டுக்கான சாம்பியன்பட்டத்தை முதன்முறையாக பெற்றார். இப்போட்டிக்குப் பின், வீரர்கள் தரவரிசையில் Raikkonen Hamilton, Alonso, ஆகியோர், முன்னணியில் உள்ளனர்.

2007ம் ஆண்டு இலண்டன் ஸ்னூக்கர் போட்டி அக்டோபர் திங்கள் 22ம் நாள் Scotlandஇல் நிறைவடைந்தது. இதில் சீன ஹாங்காங் வீரர் Fu Jiajunஉம், 2 முறை உலக சாம்பியன்பட்டம் பெற்ற பிரிட்டன் வீரர் O'Sullivanஉம் மோதினர். இப்போட்டியில் 9-6 என்ற ஆட்டக் கனக்கில் O'Sullivanஐத் தோற்கடித்து, தொழில் முறை தரவரிசை போட்டியின் முதலாவது தனியார் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். தாய்லாந்து வீரர் Wattana, சீன வீரர் Ding Junhui ஆகியோரை அடுத்து, உலக ஸ்னூக்கர் தொழில் முறை தரவரிசை போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்ற 3வது ஆசிய வீரர் இவராவார்.

அக்டோபர் 21ம் நாளிரவு, மொத்தம் 20 லட்சத்து 82 ஆயிரத்து 500 யூரோ பரிசு தொகை கொண்ட ATP Madrid டென்னிஸ் போட்டி, முடிவடைந்தது. பிரபல அர்ஜென்டின வீரர் Nalbandian, எதிர்பாராதவிதமாய், சாம்பியன் பட்டம் பெற்றார். இறுதி போட்டியின், முதல் ஆட்டத்தில் வெற்றி பெறாத நிலையில், தொடர்ந்து 2 ஆட்டங்களை வென்று, அவர் 2-1 என்ற கணக்கில் முந்தைய சாம்பியனான Roger Federerஐ தோற்கடித்தார். அவர், ATP Madrid டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் பெறுவது, இதுவே முதன் முறையாகும்.

மகளிர் பிரிவில், 13 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு தொகை கொண்ட WTA ஸ்விட்சர்லாந்து Zurich போட்டி, அக்டோபர் 21ம் நாள் நிறைவடைந்தது. உலகத் தரவரிசையில் முதலிடத்திலுள்ள வீராங்கனை ஹெனின் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில், அவர் 2-0 என்ற ஆட்ட கணக்கில் பிரான்ஸின் வீராங்கனை Golovinனை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.