• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-30 11:37:06    
யுங் ஹெ கொங் லாமா கோயில் (ஆ)

cri

மைய மண்டபத்தின் வடகிழக்கு மூலையில், நின்றபடி காட்சியளிக்கும் Guanyin வெண்கலச் சிலையும், வடமேற்கு மூலையில் நிற்கும் Maitreya வெண்கலச் சிலையும் உள்ளன. இரு பக்கங்களின் தோட்ட சுவர்களுக்கு முந்திய அரியாசனத்தில், பதினெட்டு புத்த ஞானிகள் அமர்ந்துள்ளனர். மாமண்டபத்தின் இரு முற்றங்களில் சி சியுயே மண்டபம் அமைந்துள்ளது.

தா சியோங் மண்டபத்தின் வெளியே உள்ளது யுங் யோ மண்டபமாகும். அதன் கட்டமைப்பு, தியன் வாங் மண்டபத்தின் கட்டமைப்பைப் போன்றது.

யுங் யோ மண்டபம், ஒரு நேரத்தில், யூங் பேரரசரின் படிப்பறையும் படுக்கை மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர், சிங் வம்சக்காலத்தில், இறந்த பேரரசர்களை வணங்கிய மண்டபமாக மாறியது. மண்டபத்தின் மையப்பகுதியில் தாமரை அரியாசனத்தில், தானிய தேவன் சிலை அமர்ந்தது. நடுவில் Amitabha சிலை வைக்கப்படுகிறது. இடது பக்கத்தில், மருத்து புத்தர் சிலை அமைந்துள்ளது. வலது பக்கத்தில், குரக்கும் சிங்க சிலை உள்ளது.

யுங் யோ மண்டபத்துக்குப் பின்னால் உள்ளது ஃபா லூன் மண்டபமாகும். இரு பக்கங்களில், Panchen லாமா மாளிகையும் Jietai மாளிகையும் இடம்பெறுகின்றன. இம்மண்டபத்தின் உச்சியில், ரகசிய மாடியும் ஐந்து வெண்கல கோபுரங்களும் உள்ளன. அவை, திபெத் இனத்தின் பாரம்பரிய கட்டிட பாணியில் கட்டியமைக்கப்பட்டன. மண்டபத்தின் மையத்திலுள்ள பெரிய தாமரை மேடையின் மேல், 6.1 மீட்டர் உயர்வான வெண்கல புத்தர் சிலை ஒன்று புன்சிரிப்புடன் அமர்ந்துள்ளது. அவர், திபெத் இன புத்தமதத்தைத் தோற்றுவியவர் ச்சோங் க்கா பா ஆசிரியராவார். இச்சிலை, 1924ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. 2 லட்சம் வெள்ளி யுவானைப் பயன்படுத்தி 2 ஆண்டுகள் காலத்தில் உருவாக்கப்பட்டது.

திரு ச்சோங் க்கா பா சிலைக்குப் பின், ஐநூறு புத்த ஞானிகள் ஒன்று குவித்த மலை காட்சி மரச் சித்திரத்தில் நிற்கிறது. இதன் உயரம், 5 மீட்டர், நீளம் 3.5 மீட்டர் ஆகும். முழுவதும் செஞ் சந்தனத்தால் செதுக்கப்பட்டது. ஐநூறு புத்த ஞானிகள் இடம்பெறும் மலைக்கு முன், ஒரு மரப் பாத்திரம் இருக்கிறது. ச்சியான் லோங் பேரரசர் பிறந்த 3வது நாளில், இதைப் பயன்படுத்திக் குளித்தார் என்ற கதை உண்டு.

ஃபா லூன் மண்டபத்தின் வெளியே, 25 மீட்டர் உயர வான் ஃபூ க்கே கோயில் இருக்கிறது. அதன் இரு பக்கங்களில், யூங் க்காங் க்கே கோயில் மற்றும் யேன் சூயி க்கே கோயில் இடம்பெறுகின்றன. அங்கு, 18 மீட்டர் உயரமான Maitreya சிலை ஒன்று வைக்கப்படுகிறது.

யுங் ஹெ கொங் லாமா கோயில், ஹான் மற்றும் திபெத் இனங்களின் பண்பாட்டு மணியாகும். இது, சீன அரசவையால் முழு நாட்டின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்பு இடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.