• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-30 11:31:27    
சீனாவின் மேற்கு பிரதேசத்தில் அயோடின் பற்றாக்குறை நோயை ஒழிப்பது

cri

1995ம் ஆண்டு, சீனாவில் அயோடின் உப்பு பரவல் விகிதாச்சாரம் சுமார் 30 விழுக்காடு மட்டுமே. தற்போது, இது 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்றார் அவர்.
ஆனால், சில சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களிலும், வறிய தொலைதூர மலைப் பிரதேசங்களிலும், அயோடின் உப்பு பரவல் குறைவு என்னும் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீனத் துணை சுகாதார அமைச்சர் wang long de கூறினார். அவர் கூறியதாவது,


பெரும்பாலான மேற்கு பகுதிகளில் அயோடின் பற்றாக்குறை நிலைமை மிகவும் கடுமையாக இருக்கின்றது. அயோடின் உப்பின் விலை, விநியோகம் முதலிய பிரச்சினைகளால், அங்குள்ள மக்களின் அயோடின் சத்து நிலைமை நீண்டகாலமாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. ஆகையால், மேற்கு பகுதியில் அயோடின் பற்றாக்குறை நோயை ஒடுக்கும் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
சின் ச்சியாங் சுகாதார வாரியத்தின் தலைவர் Mamatimin yasen கூறியதாவது
அயோடின் பற்றாக்குறை நோய் ஒடுக்கும் பணியில் முழுப் பிரதேசத்தின் குறிப்பாக முக்கிய பகுதிகளின் பல்வேறு நிலை அரசுகள் மற்றும் தொடர்புடைய வாரியங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் தன்னாட்சி அரசு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அயோடின் உப்பை உட்கொள்ள தெற்கு பகுதியின் si di zhou விலான விவசாயிகளுக்கு 1 கோடியே 80 இலட்சம் யுவான் மதிப்புள்ள சிறப்பு உதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.


இவ்வாண்டு, அயோடின் பற்றாக்குறை நிலைமை மோசமாகவுள்ள தெற்கு சின் ச்சியாங்கில் அயோடின் சத்து வழங்கும் அவசர பணி மேற்கொள்ளப்பட்டது. அக்சூ, ஹுர்தியேன் முதலிய இடங்களில் 60 ஆயிரம் ஆயர்களும் விவசாயிகளும் உரிய நேரத்தில் அயோடின் சத்து மருந்தை உட்கொள்கின்றனர்.
தவிர, தெற்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும், சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் சுகாதார வாரியம் அயோடின் சத்து பற்றிய பெரிய ரக பிரச்சார நடவடிக்கை நடத்தியது. மே திங்கள் 15ம் நாள், உருமுச்சி நகரின் சதுக்கத்திலும், முக்கிய சாலைகளிலும் இந்த பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவாகுலி என்னும் பெண்மனி பத்துக்கு அதிகமான பிரச்சார படங்களை பெற்றார். பிரச்சார நடவடிக்கை மூலம், அயோடின் பற்றாக்குறையினால் மனித உடம்பில் ஏற்படும் பாதிப்பு பற்றியும், அயோடின் சத்து கிடைப்பது கடினம் இல்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
அயோடின் பற்றாக்குறை மனிதரின் விவேகத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும். அயோடின் சத்து கிடைப்பது எளிமையானது. உணவு வழக்கத்தை மாற்றி, அயோடின் உப்பை அடிக்கடி உண்பது நல்லது என்றார் அவர்.
அயோடின் பற்றாக்குறையின் கடுமையான நிலைமையில், தமது மாநிலத்தின் அரசுகள் கவனம் செலுத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணியை வலுப்படுத்தியுள்ளன என்று இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கான் சு மற்றும் சிசுவான் மாநிலத்தின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.


2010ம் ஆண்டுக்குள் முழு நாட்டின் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நகரங்களிலும் வட்டங்களிலும் அயோடின் பற்றாக்குறை நோய் ஒழிப்பதென்ற இலக்கை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதற்கென இந்த நோய் நிலைமையை கண்காணிக்கும் முன் எச்சரிக்கை பணியை பல்வேறு சுகாதார வாரியங்கள் வலுப்படுத்தி, கண்காணிப்பு பரவலை அதிகரித்து, அவசர நிலைமையைக் கையாள்வதற்கு ஆயத்த பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று wang long de கூறினார். இந்தப் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் தரத்தை உயர்த்தி, மக்களுக்கிடை நோய் தடுப்புக் கருத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.