....... திருப்பூர் இரா.சின்னப்பன்.சீனக்கம்யூனினிஸ்ட் கட்சி மத்தியக்கமிட்டியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.ஹுச்சிந்தாவ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு சிறுபான்மைத் தேசிய இன மக்கள் ஆகியோரோடு அவர்கள் நெருக்கமாகப் பழகுவார்கள் என்றும், 17வது தேசிய மாநாடு முன்வைத்த பல்வேறு கடமைகளை, உணர்வுப்பூர்வமாக
நடைமுறைப்படுத்துவதாக திரு.ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ள கருத்துக்கள் சீனாவை உலகின் வலிமையான நாடாக அவர் முன்னேற்றிச் செயல்படுத்துவார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. வாழ்த்துக்கள். ............ வளவனூர் முத்துசிவக்குமரன் சீனாவில் அரசியல் அமைப்பு முறை சீர்திருத்தத்தை ஆக்கப்பூர்வமாகவும், நிதானமாகவும் விரைவுபடுத்தி சோஷலிச ஜனநாயகத்தை வளர்ப்பது எப்போதும் சீனச் சீர்திருத்த வளர்ச்சியில் முக்கிய கடமையாக உள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி அமைப்புத் துணைத் தலைவர் கூறியிருக்கிறார். மேலும் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கையை நடைமுறைபடுத்திய பிறகு, சீன அரசியல் அமைப்பு சீர்திருத்தத் துறையில் பெரும் சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிட்டு சீனாவின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார். இது போன்ற நடைமுறை சீர்திருத்தங்கள் சீனாவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ...........பெரிய காலாப்பட்டு பி.சந்திரசேகரன் சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சீனாவின் மேற்குப் புற பகுதிகளுக்கு இரண்டு லட்சம் கிலோ
மீட்டர் தூரம் பயணம் சென்று அங்குள்ள மக்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வரும் சீன நிழற்பட செய்தி முகவர் பாங்ஷன்தோ அவர்களை பற்றி வழங்கிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. நாடென்ன செய்தது நமக்கு என்று என்னாமல் நாம் என்ன செய்தோம் அதற்கு என்று எண்ணி செயல்படும் இவரைப் போன்றவர்களின் தொண்டு சீன நாட்டுக்கும், மக்களுக்கும் மிகவும் தேவையே. மேலும் இவர் பயணத்தின்போது கண்ட, கேட்ட காட்சிகளையும் செய்திகளையும் தொகுத்து வழங்க உள்ளது, சீனாவின் மேற்குப் புற உயிரின வாழ்க்கைச் சூழலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். ....... ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன். சீன அரசுத் தலைவர் அவர்கள் சீனவானொலி நேயர்களுக்காக அளித்த "அமைதி,வளர்ச்சி,ஒத்துழைப்பு ஆகியவை நிறைந்த புதிய அத்தியாயத்தை பொறிப்போம்" என்ற 2007-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துரை பற்றிய எனது எண்ணப் பதிவுகளை பதிவு செய்திட விழைகிறேன். அவர் தமது வாழ்த்துச் செய்தியை துவக்கும் வேளையில், தம் நாட்டில் வாழும் சீனர்களுக்கு மட்டும் வாழ்த்துக்களை கூறாமல் தம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனமக்களுக்கும், ஹாங்காங் மற்றும் மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களில் வாழும் சக நாட்டவர்கள், தைவான் உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்து கூறியது அவரின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது. சர்வதேச நிலைமை பற்றி குறிப்பிடுகையில் அவர் தமது உரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சி, பல துருவமயமாக்கம், நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, உலக அமைதி நடவடிக்கைகள் போன்றவை பற்றி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற நாடுகளுக்கிடையிலான சிறுசிறு போர்கள் மற்றும் மோதல்கள், வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிப்பு, நாடுகளைக் கடந்த பயங்கரவாதம், சுற்றுச்சூழல் சீர்கேடு, இயற்கைச் சீற்றம் போன்ற பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளமை அவரின் ஈடுபாட்டுடன் கூடிய உலக நோக்கை உணத்தியது.
இறுதியாக உலக அமைதிக்கும் சர்வதேச ஒத்துழைப்பிற்கும் அவர் விடுத்துள்ள அறைகூவல் இப்புதிய ஆண்டில் அனைத்து நாட்டுத் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய செய்திகளை உள்ளடக்கி இருந்தமை பாராட்டுக்குரியது.
|