• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-31 17:16:16    
மூவருக்கு இரண்டு பழங்கள் 2

cri

தியன் கைஜியாங் மறுமொழியாக, இரண்டு முறை எதிரிகளை என் வாள் கொண்டு போரிட்டு புறமுதிகிட்டு ஓடவிட்டேன்.என் சேவைகளை மதிப்பிட்டால், எனக்கு நிச்சயம் முழுமையான ஒரு பழம் சொந்தமாகவேண்டும் என்று கூறி அவனும் ஒரு பழத்தை எடுத்துக்கொண்டான்.

மூன்றாமவனான கு யேசு, ஒரு முறை நமது கோமகன் பெருந்தகையோடு மஞ்சள் ஆற்றை கடந்து சென்றேன். எங்கள் குதிரை வண்டியை பெரிய ஆமையொன்று பற்களால் கடித்து இழுத்து ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் கொண்டு சென்றது.

அந்த ந்நெரத்தில் நீந்த முடியாது என்பதால், நீருக்கு அடியில் சென்று ஆற்ரின் போக்கிற்கு எதிராக 100 அடி சென்று, பின் ஆற்றின் போக்கில் ஏறக்குறைய 1500 அடி நீந்தி அந்த ஆமையை பிடித்து கொன்றேன். வண்டியின் குதிரையுடை வால் ஒரு கையிலும், ஆமை பெரிய தலை ஒரு கையிலுமாய் நான் நீரிலிருந்து எழுந்தபோது, மக்கள் ஆற்றுக்கடவுள் என்று எனை நினைத்து குரலெழுப்பினர். என் வெற்றிகளின் கணத்தை பார்த்தால் இந்த இரு பழங்களில் ஒன்று எனக்கும் சொந்தமானதுதான், நான் யாருக்கும் பங்கு தரத் தேவையில்லை எனவே நீங்கள் இருவரும் பழங்களை என்னிடம் தாருங்கள் என்று கூறி, தனது வாளை உருவியபடி எழுந்து நின்றான்.

இதைக் கேட்ட மற்ற இருவரும் உன் அளவுக்கு நாங்கள் இருவரும் வீரர்களில்லை. பழங்களை உனக்கு தராமல் நாங்கே வைத்திருந்தால் அது பேராசை. நாங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளாவிட்டால் அது நாங்கள் வீரமற்றவர்கள் என்று பொருள்படும் என்று கூறியபடி, பழங்களை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் வாளால் தங்கள் கழுத்தை அறுத்து மாண்டனர்.

அவர்கள் இறந்து நான் மட்டும் வாழ்ந்தால் அது பெருமையல்ல. என் புகழ் பாடி மற்றவரை வார்த்தைகளால் காயப்படுத்தினால் நான் நியாயமற்றவன். அவர்கள் இருவரும் ஒரு பழத்தை பகிர்ந்துகொள்ள நான் ஒரு பழத்தை எடுத்துக்கொள்வதுதான் சரியென்றாலும், நான் செய்ததை எண்ணி நான் மனம் வருந்தியும், உயிர் துறக்காமலிருந்தால் நான் கோழை என்று புலம்பிய கு யேசு, பழங்களை கீழெ போட்டுவிட்டு வாள் கொண்டு தன் கழுத்தை அறுத்து உயிர் நீத்தான். கோமகன் பழம் கொடுத்தனுப்பியவன் திரும்பி நடந்தை சொல்லி மூவரும் இறந்ததை அறிவித்தான்.

வீர மறவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதைகளுடன் அவர்கள் மூவரையும் அடக்கம் செய்ய பணித்தார் கோமகன் ஜிங்.