• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-31 20:38:00    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

உள்நாட்டு மக்கள் எதிர்பார்ந்த, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவு சீட்டுகளுக்கான 2வது சுற்று விற்பனை பணி, அக்டோபர் 30ம் நாள் காலை மணிக்கு, துவங்க உள்ளது. இப்பணி, 2008ம் ஆண்டு முதல் திங்கள் வரை நீடித்திருக்கும். இச்சுற்றில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்வது மட்டுமல்ல, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழா, நிறைவுவிழா, போட்டிகள் ஆகியவற்றின் நுழைவுச்சீட்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

இச்சுற்றின் போது விற்பனை செய்யப்படும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளில், துவக்கவிழா நிறைவுவிழா ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் இல்லை.

நுழைவுச்சீட்டுகளுக்கான விற்பனை பணியின் முதல் சுற்றில், 15 இலட்சத்து 90 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2வது சுற்றில் போட்டி பகுதிக்கான நுழைவுச் சீட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். 3வது சுற்று விற்பனை பணி, அடுத்த ஆண்டு நடைபெறும் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழுவின் துணை செயல் தலைவர் jiang xiao yu கூறினார்.

இவ்வாண்டு ஜூன் திங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சிநிரலை வழங்கியது. அண்மையில், சர்வதேச ஒலிம்பிக் குழு, இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்களுக்கான அனைத்து நிகழ்ச்சிநிரல்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சி நிரலின் படி, மகளிர் 10 மீட்டர் துப்பாக்கிச்சூடு போட்டியின் தங்க பதக்கமே, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முதல் தங்க பதக்கமாக இருக்கும்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முன் சீனாவில் நடைபெறுகின்ற நாடாளவிலான பன்நோக்கு விளையாட்டு போட்டியாக, 6வது சீன நகர விளையாட்டு போட்டி 25ம் நாள் சீனாவின் மையப்பகுதியான Wu Han நகரில் துவங்கியது.

வரலாற்றில் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய நகர விளையாட்டு போட்டி இதுவாகும். 74 நகரங்களைச் சேர்ந்த 6351 வீரர்களும் வீராங்கனைகளும் இறுதி கட்ட போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.