"ஊர்" என்னும் பாடலைக் கேட்கலாமா? Han Hong, இப்பாடலை இயற்றி, பாடுகின்றார். அவரது கருத்தில், திபெத், அன்பான ஊராகும். தமது ஊருக்காக என்றுமே தான் பாடல் பாட உள்ளதாக அவர் கூறினார். இப்பாடலில், அன்பான திபெத் வர்ணிக்கப்படுகின்றது. நீல வானம், வெள்ளை மேகங்கள், குன்றுகளில் நிறைந்து காணப்படும் ஆடுமாடுகள், உயரப் பறக்கும் கழுகு ஆகியவை அவரின் பாடல்களில் உணரப்படும். திபெத் இன இசையை அடிப்படையாகக் கொண்ட இப்பாடல், இனிமையான குழந்தைப் பாடல் போல், ஊர் மீதான ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துகின்றது.
|