கண்ணைக் கவரும் ஹுவாங் ஷான் மலை(ஆ)
cri
முன்னர் ஏறிச்செல்ல முடியாததாய் கருதப்பட்ட அந்த ஏற்றம், இன்று எளிதில் ஏறிச்செல்லக்கூடியதாய் மாறிவிட்டது. கற்படிகள் அமைக்கப்பட்டு ஏறிச்செல்வோர் பிடித்துச்செல்லச் சங்கிலித்தொடர்களும் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று கிலோமீட்டர் நீளமான அக்குறுகிய நடைபாதையைத் தொலைவில் இருந்து பார்த்தால், அது செங்குத்தான பாறைகளிலிருந்து தொங்கும் ஏணி போலவும் அதிலே ஏறிச் செல்லும் மக்கள் வரிசைகள், முகில்கள், புதர்களுக்கிடையே அசைகின்ற வண்ண நாடக்கள் போலவும் காட்சியளிக்கின்றன. 1860 மீட்டர் உயரமான தாமரை மலர்சிகரமே, ஹுவாங் ஷான் மலையின் மிக உயர்ந்த சிகரமாகும். அதன் முனைகள், மலர்ந்த தாமரை மலர் போல் காட்சியளிக்கின்றன. அங்கு ஏறக்குறைய படகு வடிவில் அமைந்த பாறையும் உள்ளது. அது, "தாமரை விதை பொறுக்கும் படகு"என்று அழைக்கப்படுகின்றது. ஹுவாங்சான் மலையின் "முன்கதவு", விசித்திர பாறைகளையுடைய கவர்ச்சியான பகுதிக்கு இட்டுச்செல்கின்றது. பின்கதவானது, பைன், தேவதாரு மரங்களால் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள மலைப்பகுதி இறங்குவதற்கு இலகுவாக, சாய்ந்து செல்கிறது. அங்கு இருந்து ஓய்வான முறையில் காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும். தட்டையான மலையின் உச்சியில் நிமிர்ந்து ஓங்கி நிற்கும் தனித்த பாறை ஒன்று, தனித்தன்மை வாய்ந்த ஒரு காட்சியாகும். அது, இன்னொரு உலகுக்குச் சொந்தமான பாறை, வானத்திலிருந்து விழுந்தது போலவும். அதன் அடியிலே முகில் கடல் ஒன்று மிதந்து செல்வது போலவும் தோன்றுகிறது. கருங்கற்கனால் கட்டப்பட்ட மூன்று மாடிகளையுடைய பெய் உறாய் ஹோட்டலானது, 1630 மீட்டர் உயரம், மலையேறி களைத்து வரும் பயணிகளை அன்பாக வரவேற்கிறது. அதன் உணவு விடுதி, தொங்கு பாலத்துக்கு அருகே இதனுடன் தொடர்புடைய இன்னொரு கட்டிடத்தில் உள்ளது. இவற்றில் "ஷிஸின்"என்ற "காண்பதே நம்பிக்கை" என பொருன்படும் சிகரம் ஏராளமான மக்களைக் கவர்ந்திழுக்கின்றது. "இந்தச் சிகரத்தை அடையும் வரை, ஹுவாங் ஷான் அழகு, நம்பத்தகுந்ததல்ல என்று அங்கு செல்லும் பயணிகள் கூறுகின்றனர். ஷிஸின் சிகரத்தின் கீழேயுள்ள அதலபாதாளம் ஹுவாங் ஷான் குரங்கின் இல்லம் என்று கூறப்படுகின்றது.
|
|