• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-01 21:49:50    
ஷாங்க்ரிலாவிலுல்ள மதுவகமும் விடுதியும்

cri

கற்சாலையில் ஷாங்க்ரிலா நகரத்தின் சாலையில் நடந்த போது, அழகான ஷாங்க்ரிலா என்னும் இசையொலியைக் கேட்டோம். இவ்விசை வரும் திசையை நோக்கி சென்று, நாங்கள் இசை மதுவகம் ஒன்றில் நுழைந்தோம்.


எமது செய்தியாளர் பார்த்த மதுவகமும், தங்கிய விடுதியும், துக்சுங் என்னும் இடத்தில் அமைந்துள்ளன. இது, ஷாங்க்ரிலாவில் மிகவும் பண்டைய நகரமாகும். ஆயிரமாண்டு வரலாறுடையது. இப்பண்டைய நகரத்தின் கற்சாலை, தாமரைப்பூக்களைப் போன்று, வேறுபட்ட திசைகளை நோக்கி சென்றன. திபெத் இனத் தனிச்சிறப்பியல்புடைய கல் வீடுகள், இப்பண்டைய நகரத்தில் அமைந்துள்ளன. வீடுகளின் புறச்சுவர்கள், வெள்ளையடிக்கப்பட்டன. பகலில் பார்த்தால், எங்கெங்கும் சூரிய ஒளி வீசுவது போல் காட்சியளிக்கும். இரவில் பார்த்தால், சந்திரனின் ஒளியில் வீடுகள் மிகவும் அழகானவை. இதனால், துக்சுங், வெள்ளைக் கல்நகரமாக அழைக்கப்படுகிறது.
ஷாங்க்ரிலாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, உள்ளூரின் சிறப்பான உணவுகளை உண்பது இன்றியமையாதது. அரோகம்பா என்னும் உணவு விடுதி குறிப்பிடத்தக்கது. இவ்வுணவு விடுதி, எளிமையானதாகவும் வசதியாகவும் உள்ளது.

உரிமையாளர், பண்டைய வீட்டு சாமான்களை நாடி, உணவு விடுதியில் வைத்து, மைசையில் மிகவும் நேர்த்தியான தேநீர் கோப்பைகளையும் வைத்தார். மிளகாய் கோழிக்கறி, சுவையான இந்திய காய்கறி சாஸ் பாலடைக்கட்டி, மீன் வறுவல் ஆகியவை, அரோகம்பா உணவு விடுதியின் தனிச்சிறப்பான உணவுவகைகளாகும். இங்கே ஒரே நேரத்தில் சுமார் 40 அல்லது 50 பேரை, உபசரிக்க முடியும். பணியாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். சூ மா என்ற திபெத் இன நங்கை எமது செய்தியாளர்களிடம் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.
இவ்வுணவு விடுதியில், நேபாள உணவு சமையற்காரர் ஒருவர் உள்ளார். அவர் பெயர் பாஸ்கர். திபெத் உணவு, நேபாள உணவு, இந்திய உணவு, சீன உணவு ஆகிய அனைத்தையும், பாஸ்கர் நன்றாக சமைக்கக் கூடியவர். ஓய்வு நேரத்தில், அவர் சீன மொழியில், எங்களுடன் பேசினார்.


நான் இங்கே ஒன்றரை ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறேன். முன்பு, கான்சூ, சிங்ஹெய், சிச்சுவான் ஆகிய பகுதிகளில் வேலை செய்தேன். இங்கே வர வேண்டும் என, பல நண்பர்கள் கூறினர். ஷாங்க்ரிலா, எனக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியது. இவ்விடம், எமது தாய்நாட்டைப் போன்றது என்றார் அவர்.
அரோகம்பா என்னும் உணவு விடுதியிலிருந்து வெளியே சென்று பார்த்தால், இரவு நேரத்தில் துக்சுங் நகரம் அமைதியாக இல்லை. பண்டைய நகரத்தின் மையத்திலுள்ள சிபாஃங் சதுக்கத்தில், மக்கள் பாடல் பாடி, நடமாடுகின்றனர்.
நேயர்களே, வாய்ப்பு இருந்தால், ஷாங்க்ரிலாவின் துக்சுங் நகரத்தில் சில நாட்களாக தங்கி வாருங்கள்.