உய்கூர், உய்கூர் இன மக்கள் தங்களை அழைக்கும் பெயராகும். இது ஒற்றுமை அல்லது ஒன்றிணைப்பு என்று பொருள்படும். உய்கூர் இன மக்கள், முக்கியமாக சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் tian shan மலையின் தெற்குப் பகுதியிலான kashi, hetianயிலும் akesu, kuerle பிரதேசங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். பிறர் tian shan மலையின் வட பகுதியில் சிதறிக் வாழ்கின்றனர். இவர்களது மக்கள் தொகை 72லட்சத்து 10 ஆயிரமாகும்.

1955ம் ஆண்டின் அக்டோபர் முதல் நாள் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது.
உய்கூர் இனத்திற்கு சொந்த மொழி உண்டு. இது Artic மொழிக் குடும்பத்தின் tu jue கிளையைச் சேர்ந்தது.
உய்கூர் இன மக்களுக்கு, தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடும் கலையும் உண்டு. அவாந்தி கதைத் தொகுப்பு, 12 முக்காமு என்ற இசை நடனக் காவியம், உய்கூர் இனப் பாரம்பரிய ஆடல் முதலியவை புகழ் பெற்றவை, Kaner jing என்ற கால்வாய் இன்றும் நீர்ப்பாசனத்துக்கு முக்கிய பங்களிக்கிறது.

உய்கூர் இன மக்களுக்கு, வேளாண்மையில் ஈடுபடுகின்ற பாரம்பரியம் உண்டு. பருத்தி பயிரிடுவதல் மற்றும் தோட்டக்கலை வளர்ப்பில் அதற்கு அதிக அனுபவங்கள் உண்டு. சிங்கியாங்கில் தெற்கு வடக்கு வம்சத்தில் பெருமளவில் பருத்தி பயிரிடப்பட்டது. ஆனால் சீனாவின் மற்ற இடங்களில் 800 ஆண்டுகளுக்குப் பின்புதான் பருத்தி பயிரிடப்பட்டது. பருத்தி பயிரிடும் தொழில் நுட்பம் மற்ற இடங்களுக்கு பரவிய ஒரே வழி, சிங்கியாங் தான். சிறந்த தோட்டக்கலையால் இங்கு பல்வகை பழங்கள் அதிகமாக வளர்ந்து, பழ ஊர் என்று புகழ் பெற்றது.

உய்கூர் மக்கள் இஸ்லாமிய மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் பாரம்பரிய விழாக்கள், ழேஸ், குர்பான்,முதல் பனி நாள் முதலிய விழாக்களாகும். அவற்றில் குர்பான் விழா மிக பிரமாண்டது. பல குடும்பங்கள் கோழிகளையும் ஆடுகளையும் அடித்து கொண்டாடுகின்றனர். விழாவின் போது, அனைவரும் புதிய ஆடைகளை அணிந்து ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றனர்.

|