தற்போதைய உலக இசை நாடக அரங்கில், சீனாவைச் சேர்ந்த சாங் லி பீன், ஒரு உயர் நிலை பாடகியாவார். இனிமையான குரல் மற்றும் மனமுருகும் அரங்கேற்றத்தால் உலகின் பல ரசிகர்களை அவர் ஈர்த்துள்ளார்.
2004ம் ஆண்டு மார்சு திங்களில், சாங் லி பீன் உலகின் மிக உயர் இசை நாடக அரங்கான அமெரிக்க நியூயார்க் METROPOLITAN இசை நாடக அரங்கில் நுழைந்து கதா நாயகியாக வண்ணத்து பூச்சி அம்மையார் என்னும் இசை நாடகத்தை அரங்கேற்றி பெரும் வரவேற்பு பெற்றார். அமெரிக்க நியூயார்க் METROPOLITAN இசை நாடக அரங்கு, பாடகிகள் அல்லது பாடகர்களின் கனவு அரங்காகும். உலகின் மிய உயர் நிலை பாடகிகள் தான், அழைப்பின் பேரில் இங்கு அரங்கேற்ற முடியும் இதற்காக, உலகின் பல்வேறு நாடுகளின் கலைஞர்கள், நியூயார்க் சென்று இந்த அரங்கை பார்வையிடுகின்றனர். சாங் லி பீனின் வெற்றிகரமான அரங்கேற்றத்தால், சீனப் பாடகிகளின் தலைசிறந்த கலை நுட்பத்தை உலகம் உணர்ந்துள்ளது. அரங்கேற்றத்துக்கு பின் சாங் லி பீன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த போது, ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று 20 நிமிடத்துக்கு மேல் கரவொலி எழுப்பி கைதட்டி பாராட்டினர். இந்த அரங்கின் வரலாற்றில் இந்நிலைமை அரிதாக காணப்படும் ஒன்றாகும். இவ்வாண்டு 40 வயதான சாங் லி பீன் சீனாவின் ஹூ பெய் மாநிலத்தில் பிறந்தார். சிறு வயதில், அவருக்கு பாடல், நடனம் மிகவும் பிடிக்கும். இருந்தாலும், இசை நாடகத்துடன் எத்தொடர்பும் கொள்ளவில்லை. தந்தையின் செல்வாக்கால் அவருக்கு பீக்கி்ங் இசை நாடகமும் மிக பிடித்திருந்தது. அவர் கூறியதாவது
எனது தந்தைக்கு பீக்கிங் இசை நாடகம், பிடித்திருக்கிறது. அப்போது அவர் பீக்கிங் இசை நாடகங்களை எங்கு சென்று பார்த்தாலும் என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பத்து வயதான பிறது சாங் லீ பீன் அம்மையாருக்கும் முதல் முறையாக இசை நாடக அறிமுகம் கிடைத்தது. கமிலிய பெண்மணி என்னும் இசை நாடகத்தை அவர் கேட்டு இதன் உள்ளடக்கத்தை அறிந்துக் கொள்ளாமல் இருந்த போதிலும், இவ்விசை நாடகம் ஏற்படுத்திய காக்கத்தால் மனமுருகினார். இசை நாடகம், மிக அழகானது என்று அவர் உணர்ந்தார். எனவே அதை விரும்ப துவங்கினார். 1989ம் ஆண்டு, சீன மத்திய இசை கல்லூரியின் இசை நாடகதுறையில் அவர் படிப்பை முடித்துக் கொண்டு இளங்கலைப்பட்டத்தை பெற்றார். 1990ம் ஆண்டு, அவர் கனடாவின் வெங்குவே இசைக் கல்லூரியில் மேலும் கற்றுக் கொண்டார். இதற்கு பிந்திய இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் அரங்கேற்ற கலைஞர் சான்றிதழை பெற்றார். பயிற்சிக்கு பின், அவர் வெங்குவே இசை நாடக அரங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வதேச இசை நாடக அரங்கில் அரங்கேற்ற துவங்கினார்.
|