கிராமங்களில் மருத்துவ உத்தரவாத அமைப்பு முறையின் உருவாக்கத்தை பன்முகங்களிலும் முன்னேற்றி, 2010ஆம் ஆண்டுக்குள், பெரும்பாலான கிராமவாசிகளை இவ்வமைப்பு முறையில் சேர்க்கப்பாடுபடும் என்று சீனச் சுகாதார அமைச்சகம் நேற்று சீன அரசின் சார்பில் வாக்குறுதி அளித்தது. சீனச் சுகாதார அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் கூட்டாக நடத்திய சீன கிராமப்புற துவக்க நிலை சுகாதாரம் மற்றும் உடல் நல வளர்ச்சி பற்றிய சர்வதேச கருத்தரங்கு நேற்று பெய்சிங்கில் நிறைவடைந்தது. அரசின் தலைமையில், பொது நிதித் தொகை ஆதரவுடன், பொது மக்கள் பங்கெடுக்கும் நிதி திரட்டு அமைப்பு முறையை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று சீனச் சுகாதார அமைச்சகம் வாக்குறுதி அளித்தது. பொருளாதார வளர்ச்சியுடன், உத்தரவாத நிலையை படிப்படியாக உயர்த்தி, கிராமப்புறங்களிலும் ஒதுக்குப்புறப் பிரதேசங்களிலும் வறியவர்களுக்கான மருத்துவ உதவி அமைப்பு முறையையும், அவர்களின் அடிப்படை சுகாதார பிரச்சினையையும் மேம்படுத்த வேண்டும் என்று இது வாக்குறுதி அளித்தது.
|