• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-05 15:54:33    
கள்ளப்பதிப்பை எதிர்ப்பதன் சீனாவின் சாதனைகள்

cri

கடந்த சில ஆண்டுகளில், சீன அரசு பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, கள்ளப்பதிப்பு எதிர்ப்புப் பணியை விரைவுபடுத்துவதால், உலகில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 2006ம் ஆண்டின் ஜூலை திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, சீனாவின் 10 அமைச்சகங்களும் ஆணையங்களும் நாட்டு முழுவதிலும் மாபெரும் கள்ளப்பதிப்பு எதிர்ப்புக்கான நூற்று நாட்கள் நடவடிக்கையை மேற்கொண்டன. சந்தையின் ஒழுங்கு குறிப்பிட்டத்தக்க அளவில் சீராக மாறுகிறது. இதற்குப் பின் சீன அரசு நாள்தோறும் கள்ளப்பதிப்பு எதிர்ப்பு என்ற நடவடிக்கையைச் செயல்படுத்தியது.பதிப்புரிமை மீறல் மற்றும் கள்ளப்பதிப்பு எதிர்ப்பு மீது வலிமையாகத் தாக்குவதை நீண்டகாலமாக நிலைநிறுத்தி வருகிறது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் ஜூலை திங்கள் வரை, சுமார் 16 லட்சம் சட்ட அமுலாக்கப் பணியாளர்கள் இடைவிடாமல் சந்தையைச் சோதனை செய்து வருகின்றனர். 700 லட்சம் பதிப்புரிமை பெறாத வெளியீடுகளைப் பறிமுதல் செய்தது. அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு பற்றிய சர்வதேச பொது ஒப்பந்தங்களில் சீனா ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொள்கிறது. இவ்வாண்டு ஜூன் திங்கள் 9ம் நாள், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு பதிப்புரிமை உடன்படிக்கை, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அரங்கேற்றும் மற்றும் ஒலி பதிவு ஆக்கப் பொருள் பற்றிய உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்பட்டன.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பது, சட்ட முறைமையை மேலும் மேம்படுத்த மட்டுமல்ல, வழக்குகளை புலனாய்வு செய்யக் கையாள வேண்டும். தவிரவும், சட்டம் மீறிவோரைக் கண்டிபாக ஒடுக்கும். கள்ளப்பதிப்புப் பிரச்சினையை முற்றாகத் தீர்க்கும் வகையில், பொது மக்கள் கருத்துக்களை உருவாக்கத் தேவைப்படும். கள்ளப்பதிப்பு எதிர்ப்புப் புகார் மையத்தை நிறுவிது ஒரு கல்வி முறையாகும் என்று சீனத் தேசிய செய்தி வெளியீட்டுப் பணியகத்தின் தலைமை அலுவலகத் தலைவரும், தேசிய பதிப்புரிமைப் பணியகத் தலைவருமான liubinji தெரிவித்தார்.

நண்பர்களே, கள்ளப்பதிப்பை எதிர்ப்பதன் சீனாவின் சாதனைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.