• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-05 09:33:08    
வெற்றிப்பாதையில் Chang'e

cri

நாடுகளின் வளர்ச்சி என்பது பன்முகதன்மை கொண்டது. "உடலின் ஒரு பகுதி மட்டும் வீங்கி கொண்டே சென்றால் அது வளர்ச்சி அல்ல. வியாதி". அதேபோல் நாட்டின் வளர்ச்சி என்பது அதன் எல்லா துறைகளிலுமான வளர்ச்சியாக இருத்தல் வேண்டும். சீனாவின் பன்முகத்தன்மையிலான வளர்ச்சியை பார்த்து உலகே ஆச்சரியப்பட்டு வருவது நாமறிந்ததே. அதன் விண்வெளி தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அண்மையில் அனுப்பப்பட்ட Chang'e 1 என்ற சந்திர ஆய்வு செயற்கைக்கோள் உலகிற்கு அறிவித்தது.

2007 அக்டோபர் 24 ஆம் நாள் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட இச்செயற்கைக்கோள் சீனா விண்வெளியில் மிக முக்கிய ஆற்றலாக உருவாவதற்கு வழிவகுத்துள்ளது. வளரும் நாடுகள் விண்வெளி ஆய்வு, சந்திரஆய்வு என்றெல்லாம் கனவு காண முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் தகர்த்தெறிந்து, வளரும் நாடான சீனா, முதல்முறையாக, இதுவரை வரலாற்றில் கண்டிராத செலவு குறைவான ஆனால் தரமான 1.4 பில்லியன் யுவான் மதிப்பிலான இச்செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. பழங்கதை ஒன்றின்படி மகிழ்ச்சியான வாழ்வு வாழ சந்திரனுக்கு பறந்த சீனப்பெண் கடவுளின் பெயரை இது கொண்டுள்ளது.

"இச்சந்திர ஆய்வு சீன அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாகவும், தேசியத் திறனின் முக்கிய செயல்பாடாகவும், சர்வதேச அளவில் சீனாவின் மதிப்பை வளர்ப்பதாகவும் உள்ளது" என்று சீன சந்திர ஆய்வு திட்ட தலைமை ஆணையாளர் லுயன் என்ஜியி தெரிவிக்கிறார்.

இதுவரை சீன நிபுணர்கள் கையாளாத தொழிற்நுட்பத்தை கொண்டுள்ள இச்செயற்கைக்கோள் சந்திர சுற்றுவட்டப்பாதையை அடைவதற்கு முன்னர் ஒரு மில்லியன் கிலோமீட்டருக்கு மேலான தூரத்தை கடக்கிறது என்பது இதன் சிறப்பு. பொதுமக்கள் மற்றும் நிபுணர் குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட 30 சீன நாட்டுபுறப்பாடல்கள் இச்செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்படுவதோடு, சீன நாட்டுப்பண் மற்றும் 1970 இல் சீனாவின் முதல் விண்வெளி செயற்கைக்கோளிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்ட மாசேதுங் அவர்களுக்கு மதிப்பளிக்கும் "கிழக்கு சிவத்திருக்கறது" என்ற பாடலும் ஒலிபரப்பப்படுகின்றன. அரசுத்தொலைக்காட்சி இதை நேரடியாக ஒளிபரப்பி நாட்டின் சாதனைகளையும், பன்முக வளர்ச்சியையும் எடுத்தியம்ப உள்ளது.

"இச்செயற்கைக்கோள் ஏவகலன் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, தொலை உணர்வறிதல், கருவிகளுக்கான ஆய்வு மற்றும் மேம்பாடு போன்ற அதியுயர் தொழில்நுட்ப தேவைகளை கொண்டுள்ளது" என்ற லுயன் "இவை சீன அறிவியல் மற்றும் நுட்பங்களில் விரைவான வளர்ச்சியை கொணர்வதோடு சந்திரனிடமிருந்து நேரடி தகவல்களை பெற செய்யும்" என்றார்.

இந்த சந்திர ஆய்வுத்திட்டம் விண்வெளி ஆய்விலான சீனாவின் தற்சார்புத் திறனின் வளர்ச்சியாகும். இத்தகைய தற்சார்பு திறனின் வளர்ச்சி சீனா உலகிற்கு காட்டியுள்ள முக்கிய பங்களிப்பாகும் என்று சீன சந்திர ஆய்வுத்திட்டத்தின் செயற்கைக்கோள் அமைப்பு தலைமை வடிவமைப்பாளர் மற்றும் தலைமை ஆணையாளர் யி பெய்ஜியன் தெரிவித்தார்.

சந்திர ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள சீனா பல வெற்றிகரமான விண்வெளி ஆய்வு வரலாற்றை கொண்டது என்பது நாம் அறிய வேண்டியது.

1956 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்த எண் 5 ஆய்வு நிறுவனத்தை ஏவகணை மற்றும் ஏவுகலன் ஆய்வுக்கான முதல் நிறுவனமாக சீனா நிறுவி, விண்வெளி தொழில்நுட்பங்களை வளர்க்க தொடங்கியது.

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் துங்பங்ஹ_ங் 1 என்ற முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி சீனா உலகில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய 5 வது நாடானது.

1975 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25 ஆம் நாள் மீளப்பெறக்கூடிய முதல் செயற்கைக்கோளை ஏவியது. அது ஏவப்பட்ட மூன்றாம் நாள் புவிக்கு திரும்பியது. இம்முயற்சி சீனாவை உலக அளவிலான மீளப்பெறும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை தன்வயப்படுத்திய 3 வது நாடாக மாறியது.

1992 ஜனவரி திங்கள் சீனா "921 விண்வெளித்திட்டம்" என்ற மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத்திட்டத்தை தொடங்கியது.

1999 ஆம் ஆண்டு ஆளில்லா சோதனை விண்கலத்தை ஏவியது.

2000 - 2001 ஆம் ஆண்டு ஷென்ஷோ மூன்று ஆளில்லா விண்கலன்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.

2003 அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள் ஷென்ஷோ V சீனாவின் முதல் விண்வெளிவீரர் யாங் லிவெயுடன் விண்ணில் ஏவப்பட்டு அடுத்தநாள் புவிக்கு திரும்பியது. இது சீனாவை உலக அளவில் மனிதரை விண்வெளிக்கு அனுப்பிய மூன்றாவது நாடாக மாற்றியது.

2005 அக்டோபர் 12 ஆம் நாள் 2 விண்வெளிவீரர்களுடன் ஏவப்பட்ட ஷென்ஷோ VI விண்கலன் 5 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தது. சீனா இருவரை விண்வெளிக்கு அனுப்பிய முதல் முயற்சி இதுவாகும்.

இவற்றை தொடர்ந்தது தான் Chang'e 1 சந்திர ஆய்வு செயற்கைகோள். இத்தகைய விண்வெளியிலான ஆய்வில் சீனாவின் படிப்படியான தொடர்ந்த முன்னேற்றம், எல்லா துறையிலுமான அதன் விரைவான வளர்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. ஆற்றல் போட்டிக்காக அல்லாமல், மக்கள் வளர்ச்சிக்காக விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனாவின் முயற்சிகள் வெற்றி பெறுவது நிச்சயமே.