• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-05 15:22:44    
வட கிழக்காசியப் பிரதேச ஒத்துழைப்பு( தொகுதி 1)

cri

மூன்றாவது வட கிழக்காசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சி செப்டெம்பர் திங்களின் துவக்கத்தில் சீனாவின் Jilin மாநிலத் தலைநகரான changchun இல் முடிவடைந்தது. இப்பொருட்காட்சி 4 நாட்கள் நீடித்தது. 6 வட கிழக்காசிய நாடுகள், இப்பொருட்காட்சியைப் பயன்படுத்தி, இப்பிரதேச ஒத்துழைப்பை மென்மேலும் ஆழமாக முன்னேற்றும் என்று இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டோர் பொதுவாகக் கருதினர்.

சீனாவின் Liaoning、Jilin、Heilongjiang மூன்று மாநிலங்கள், உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, ரஷியாவின் தொலை கிழக்குப் பிரதேசம், கொரிய தீபகற்பம், ஜப்பான், மங்கோலியா ஆகியவை வட கிழக்காசிய பிரதேசத்தில் அடங்கும். இப்பிரதேசத்தின் நிலப்பரப்பு ஏறக்குறைய ஒரு கோடியே 70 லட்சம் சதுர கிலோமீட்டராகும். வட கிழக்காசியப் பிரதேச நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்புப்பூர்வமான பரிமாற்ற வரலாறு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டு அளவு மேலும் ஆழமாக மாறும் போக்கில், இப்பிரதேசத்தின் பல்வேறு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை ஆர்வத்துடன் வலுப்படுத்துவதாக சீனத் துணை தலைமையமைச்சர் Zengpeiyan இப்பொருட்காட்சியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பொருளாதாரத் துறையில் வட கிழக்காசிய பல்வேறு நாடுகள் ஒன்றன் குறையை மற்றொன்று நிரப்பும் தன்மை குறிப்பட்டத்தக்கது. சில நாடுகள் வலிமையான பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளன. வேறு சில நாடுகளும் அதிக மூலவளம், உழைப்பு ஆற்றல், முன்னேறிய உற்பத்தி தொழில் நுட்பம், மேலாண்மையான அனுபவம் முதலிய மேம்பாடுகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக இம்மண்டல ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கு சிறந்த அடிப்படை உண்டு என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு வட கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் நிதானமாக அதிகரித்து, மண்டலத்திலுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டு அளவும் படிப்படியாக விரிவாகியுள்ளதால், பல்வேறு நாடுகளிடையான பொருளாதாரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உறவு மேன்மேலும் ஆழமாக்கப்பட்டுள்ளது. சீன-ரஷிய வர்த்தக நிலைமையை பார்த்தால், சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் வர்த்தகம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக விரைவான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இரு தரப்பு வர்த்தகத் தொகை முதன்முறையாக 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது 2005ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காடு அதிகரித்தது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் வர்த்தகமும் முக்கிய முன்னேற்றமடைந்துள்ளது.

அத்துடன், கடந்த சில ஆண்டுகளில், வட கிழக்காசியப் பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்புத் துறையின் கட்டுமானம் இடைவிடாமல் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இப் பிரதேசம் பல வடிவங்கள், நிறைந்த அம்சங்கள் வாய்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மேடையாக உருவாகியுள்ளது. இப்பிரதேசத்துக்குள் பொருளாதார வர்த்தகத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், சீன அரசு ஆக்கப்பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கை இப்பொருட்காட்சியாகும். வட கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நலன் தந்து வெற்றி பெற்று, போட்டித் திறப்புக்கான நீண்டகால ஒத்துழைப்பு மேடையைக் கட்டியமைப்பது என்பது இப்பொருட்காட்சி நடத்துவதன் நோக்கமாகும்.

வட கிழக்காசிய ஒத்துழைப்பான சிறந்த மேடை குறித்து ஐ.நாவின் வளர்ச்சித் திட்டப் பணியக அதிகாரி நடாலியா யாச்சேஸ்டோ அம்மையார் உயர்வான மதிப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

வட கிழக்காசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சி, இதில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தொழிற்நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சிக்கு தமது உற்பத்திப் பொருட்களை வைத்துக்காட்டி , ஒத்துழைப்பை உருவாக்கி, உடன்பாடுகளிலும் முதலீட்டு கருத்துரு உடன்படிக்கைகளிலும் கையோப்பமிட முடியும். வட கிழக்காசியப் பிரதேசப் பொருளாதாரத்தின் இணக்க வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இப்பொருட்காட்சி உந்து சக்தியாக பங்கு எடுப்பது உறுதி என்று அவர் கூறினார்.

இந்த ஐ.நாவின் உயர் அதிகாரியின் கூற்று படி, வட கிழக்காசியப் பிரதேசத்தின் பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பங்கு கொள்ள மென்மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள் குறிப்பாக நாடு கடந்த நிறுவனங்களும் வழிகாட்டப்படும். இப்பொருட்காட்சி இத்தகைய ஆக்கப்பூர்வமான பயன் கொண்டுள்ளது.

சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்ததோடு, சீன வட கிழக்குப் பகுதியிலுள்ள பழைய தொழிற்துறைத் தளத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த வளர்ச்சிப் போக்கு தோன்றியுள்ளது. குறிப்பாக, 2003ம் ஆண்டு முதல், வட கிழக்குப் பகுதியிலுள்ள பழைய தொழிற்துறைத் தளத்தை மறுமலர்ச்சி செய்யும் நெடுநோக்குத் திட்டத்தை சீனா மேற்கொண்டது. பல கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் முறையே வெளியிட்டப்பட்டன.