சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்ததோடு, சீன வட கிழக்குப் பகுதியிலுள்ள பழைய தொழிற்துறைத் தளத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த வளர்ச்சிப் போக்கு தோன்றியுள்ளது. குறிப்பாக, 2003ம் ஆண்டு முதல், வட கிழக்குப் பகுதியிலுள்ள பழைய தொழிற்துறைத் தளத்தை மறுமலர்ச்சி செய்யும் நெடுநோக்குத் திட்டத்தை சீனா மேற்கொண்டது. பல கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் முறையே வெளியிட்டப்பட்டன.
இப்பகுதியின் மறுமலர்ச்சி, வட கிழக்காசியப் பிரதேச ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்பை வழங்கி, இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு நாடுகளுக்கும் பெரிய வணிக வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. மங்கோலியாவிலிருந்து வந்த கட்டிடப் பொருள் வணிகர் B.Otgon Baatar, சீனாவின் வட கிழக்கில் உள்ளார்ந்த பெரிய வணிக வாய்ப்பில் ஆர்வம் காட்டினார். அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் வணிக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் கூறியதாவது:
சீனாவின் வட கிழக்குப் பிரதேச வளர்ச்சிக்கு சில புதிய முன்னுரிமைக் கொள்கைகளை சீன அரசு வழங்குவதை நான் அறிந்துகொண்டேன். இது எங்களைப் பொறுத்தவரை ஒரு சிறந்த வாய்ப்பாகும். கட்டிடத் துறையில் மட்டுமல்ல, பிற இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக துறைகளிலும் சீன ஒத்துழைப்பு கூட்டாளிகளைத் தேட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
பல்வேறு வட கிழக்காசிய நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு விரைவாக வளர்ந்துள்ளதாலும், இப்பிரதேசத்தின் பல்வேறு நாடுகளுக்கிடை வளர்ச்சி நிலைமையில் பெரிய இடைவெளி நிலவுகிறது. பரஸ்பர ஒத்துழைப்பு நிலை உயர்வாக இல்லை. ஒத்துழைப்பு அமைப்புமுறை முழுமைப்படுத்தப்படவில்லை. புதிய அறை கூவலை எதிர்நோக்கும் வகையில், பல்வேறு நாடுகள் சமத்துவமாகப் பங்கெடுத்து, ஆக்கப்பூர்வமாக பயன் தரும் முறையில் பரிமாற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசக் கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனத் துணைத் தலைமையமைச்சர் zengpeiyan விருப்பம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
சீனா தொடர்புடைய நாடுகளுடன் சேர்ந்து நெடுஞ்சாலை, இருப்புப் பாதை மற்றும் துறைமுகக் கட்டுமானத்தை விரைவுபடுத்தப் பாடுபட விரும்புகிறது. பொருளாதாரத் தொடர்பை வலுப்படுத்தி, வர்த்தக அளவைத் தொடர்ந்து விரிவாக்கி, பரஸ்பர முதலீட்டு நிலையை உயர்த்த வேண்டும். வர்த்தக தாளாரமயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் பல்வேறு வட கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து முன்னேற்றி. பயன் தரும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுங்கத் துறையை நுழைவது, நோய் வைரஸ் தொற்று தடுப்பு, வணிக விசா வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கான விதிமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று சீனத் தரப்பு விரும்புவதாக துணைத் தலைமையமைச்சர் zengpeiyan கூறினார்.
வட கிழக்காசியப் பிரதேசத்தின் மத்திய இடத்திலுள்ள சீனாவின் jilin மாநிலம், பல்வேறு வட கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், எரியாற்றல், மூலப் பொருள் முதலிய துறைகளில் நீண்டகாலமாக ஒத்துழைத்து வருகிறது. இனிமேல், இப்பிரதேச ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், இத்துறையின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் jilin மாநிலம் தொடர்ந்து ஆழமாக்கி விரிவாக்கும் என்று jilin மாநில ஆளுநர் hanchangfu தெரிவித்தார். செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:
பரிமாற்ற ஒத்துழைப்புச் சூழலை jilin மாநிலம் தொடர்ந்து மேம்படுத்தி, தற்போது வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற tumenjiang பிரதேசத்தை, சரக்குப் புழக்கம், பதனீட்டு வர்த்தகம், வணிக வர்த்தகம் சுற்றுலா முதலிய தன்மை வாய்ந்த புதிய ரக வளர்ச்சி மண்டலமாகக் கட்டியமைக்க வேண்டும் என்றார் அவர்.
|