• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-05 14:59:47    
டென்னிஸ் போட்டி பற்றியச் செய்திகள்

cri

அக்டோபர் 28ம் நாள், மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரத்து 250 யூரோ பரிசுத் தொகை கொண்ட ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் போட்டியின், ஆடவர் பிரிவு போட்டி, முடிவடைந்தது. இப்போட்டியின் முதலிடத்திலுள்ள ஸ்விட்சர்லாந்து வீரர் Federerஉம் பின்லாந்து வீரர் Nieminenஉம் இறுதிப் போட்டியில் மோதினர். இப்போட்டியில் 6-3, 6-4 என்ற ஆட்டக் கணக்கில் Nieminenஐ வென்று, Federer சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

அக்டோபர் 28ம் நாள், 2007ம் ஆண்டு டென்மார்க் பூப்பந்து போட்டி நிறைவு பெற்றது. சீன அணி, இப்போட்டியின் 4 சாம்பியன் பட்டங்களை தட்டிச்சென்றது.

பிரபல வீரர் lin dan தன் அணித் தோழர் bao chun laiயை தோற்கடித்து, ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் புதிய வீராங்கனை lu lan, தன் அணித் தோழியும், ஒலிம்பிக் சாம்பியனுமான zhang ningனை வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

சீன மகளிர் இரட்டையர் இணை, yang wei/zhang jie wen, 2-1 என்ற ஆட்ட கணக்கில், தென்கொரியாவின், li jing yuan/li xiao zhen இணையை வென்று, சாம்பியன் பட்டம் பெற்றனர்.

கலப்பு இரச்சையர் பிரவில் சீனாவின், he han bin/yu yang இணை,  சர்வதேச போட்டிகளிலான முதல் தங்க பதக்கத்தை தட்டிச்சென்றது.

அக்டோபர் 28ம் நாள், ஆஸ்திரிய மேசைப்பந்து போட்டி முடிவடைந்தது.
சீன வீரர், chen qi, ஸ்பெயின் வீரர் he zhi wenனை, தோற்கடித்து, ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். ரஷிய மேசைப்பந்து போட்டிக்கு பிறகு, ஆடவர் ஒற்றையர் போட்டின் சாம்பியன் பட்டத்தை இவர் தொடர்ந்து பெற்றுள்ளார்.
மேலும் பிரபல சீன வீராங்கனை zhang yi ning, தன் அணி தோழி guo yanனை வென்று, முதலிடம் வகித்தார்.