• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-06 14:24:53    
மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறை (அ)

cri

மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறை என்பது மிங் வம்சம் பெய்ஜிங்கை தலைநகராக நிறுவிய பின், 13 பேரரசர்களுக்கான கல்லறைகளின் மொத்த பெயர் ஆகும். அவை, பெய்ஜிங் மாநகரின் வடமேற்குப் பகுதியிலிருந்து 44 கிலோமீட்டர் தூரத்திலுள்ள Changping மாவட்டத்தைச் சேர்ந்த தியன் ஷவோ மலையின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லறைகளின் மொத்த நிலப்பரப்பு, 40 சதுர கிலோமீட்டராகும். 1409ம் ஆண்டு, Chang கல்லறை கட்டியமைக்கப்பட்டது முதல், சிங் ஷவுன் ச்சீ முதல் காலத்தில் சீ கட்டியமைக்கப்பட்டது வரையான 200க்கு மேற்பட்ட ஆண்டுகளில், Chang, Xian, ஜிங், யூ, மௌ, தய், க்காங், யிவொங், Zhao கல்லறை, திங், Qing, தே, சீ ஆகிய 13 கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 13 பேரரசர்கள், 23 பேரரசிகள், புதைக்கப்பட்டுள்ளனர். இவை, சீனாவின் பல்வேறு வம்சக்காலங்களிலான கல்லறைகளில் மிக பழங்கால பேரரசர்களின் கல்லறைகள் ஆகும். இதன் கட்டுமானங்கள், கம்பீரமாகவும், முழுமையாகவும், பழங்காலமானதாகவும் இருக்கின்றன. இவை, மிக அதிக வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்பும் வாய்ந்தவை.

மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறையின் கட்டமைப்புகள், நிறைவு செய்யப்படும் போது, மலை, நீர் முதலிய இயற்கைச் சுற்றுச்சூழலுடன் நெருக்கமாக இணைந்து, மிக உயர்நிலை கலையுணர்வு எட்டப்பட்டது. வேவ்வேறு கல்லறைகள், நிலப்பரப்பில் வேறுபாடாக இருப்பதைத் தவிர, அவற்றின் கட்டமைப்பு அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கின்றது. மட்டம், செங்கோணமாகத் தோன்றுவதோடு, பின்பகுதியில், வட்டமான மாளிகை காணப்படுகிறது. இக்கல்லறைகளில், தரை மேலுள்ள Chang கல்லறையும், தொல்பொருள் ஆராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட நிலத்தடி அரண்மையான திங் கல்லறையும், மிக புகழ் பெற்று விளங்குகின்றன. கல்லறைப் பிரதேசம் முழுவதும், சுற்றுச் சுவர்கள் இருக்கின்றன. 1409ம் ஆண்டு Chang கல்லறை கட்டியமைக்கப்பட்டது முதல், 1644ம் ஆண்டு சீ கல்லறை கட்டியமைக்கப்பட்டது வரையான 200க்கு மேற்பட்ட ஆண்டுகள், இப்பகுதி, தடை செய்யப்பட்ட பிரதேசமாக இருந்துள்ளது. காவலர்கள் அங்கு தங்கியுள்ளனர்.