• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-06 14:59:56    
ஒரு சிறப்பு வகை தேனீர் தயாரிப்பு

cri

க்ளீட்டஸ் – வணக்கம் நேயர்களே. வாணி, அண்மையில் சில முறை மழை பெய்த பின், பெய்ஜிங் இலையுதிர்காலத்துக்குள் உண்மையாக நுழைந்துள்ளது.

வாணி – ஆமாம். இலையுதிர்காலம் பெய்ஜிங்கின் மிக அழகான காலமாகும். வெயில் இருந்தால், தெளிவான வானம் காண்பதற்கு மிக அழகானது. சுற்றுலாவுக்கான நல்ல காலமாகும்.

க்ளீட்டஸ் – கடுமையான கோடைக்காலம் முடிந்துவிட்டது. கொஞ்சம் தாராளமாக சாப்பிடலாம்.

வாணி – சீனப் பாரம்பரிய வழக்கத்தின் படி, இக்காலத்தில் நீர் கலந்த உணவுகளைச் சாப்பிடலாம். இன்று நாம் ஒரு சிறப்பு வகை தேனீர் தயாரிப்பு பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். முதலில் நான் தேவையான பொருட்களைத் தெரிவிக்கின்றேன்.

ஹாங்சோ சாமந்திப்பூ 20 பூக்கள்
பேரிக்காய் 1
சர்க்கரை 25 கிராம்
தன்னீர் ஒரு லிட்டர்

க்ளீட்டஸ் – வாணி, உணவு விடுதியில் சாப்பிடும் போது, அடிக்கடி, சீன மக்கள் சாமந்திப்பூ தேன்னீரைக் குடிப்பதைக் கண்டுள்ளேன்.

வாணி – நீங்கள் சொன்னது சரி. சாமந்திப்பூ தேனீர்ரைக் குடிப்பதன் மூலம் அழற்சி நீங்கும். உடல் வெப்பத்தை தணிக்க முடியும் என்று சீன மக்கள் கருதுகின்றனர். உண்மையில், காய்ந்த சாமந்திப்பூ பூக்கள். வென்னீரில் போட்டால், நல்ல மணம் வீசுகின்றது. காண்பதற்கும் அழகானது.

க்ளீட்டஸ் – இந்த வகை பூக்களில் எந்த சிறப்பு பயன் உள்ளது?

வாணி – சாமந்திப்பூ பூக்களில், அமிலங்கள், வைட்டமின் எனும் உயர்ச்சத்துக்கள் உள்ளன. சாமந்திப்பூ தேனீர்ரைக் குடிப்பது, கண்களுக்கு மிகவும் நல்லது. சீனாவில் ஹாங்சோ நகரில் விளைந்த சாமந்திப்பூ இன் தரம் உயர்வானது. மிகவும் புகழ்பெற்றது.

க்ளீட்டஸ் – அப்படியா, செய்முறையை தெரிவிக்கவும்.

வாணி – முதலில், பேரிக்காயின் தோலை நீக்கி, இதை 4 சென்டிமீட்டர் அளவுடைய துண்டுகளாக நறுக்கவும். ஹாங்சோ சாமந்திப்பூ, தண்ணீர் ஆகியவற்றை வாணலியில் ஊற்ற வேண்டும். நல்ல சூட்டில் கொதிக்கவிடுங்கள்.

க்ளீட்டஸ் – கொதித்த பின், உடனடியாக வெளியே எடுக்கக் கூடாது. மூடி யுடன் மேலும் 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு, சாமந்திப்பூ பூக்களை வெளியே எடுக்கலாம்.

வாணி – சாமந்திப்பூ நீரில், பேரிக்காய் துண்டுகளைப் போடுங்கள். சர்க்கரையையும் சேர்க்கலாம். மிதமான சூட்டில் 30 நிமிடங்களாக கொதிக்க வையுங்கள்.

க்ளீட்டஸ் – சூடான நிலையில் குடிக்கலாமா?

வாணி – இல்லை. இந்த வகை தேனீர்ர் குளிர்ந்த நிலையில் குடித்தால் தான், நல்ல சுவை. ஆகையால், குளிர்சாதன பெட்டியில் வைத்த பிறகு குடிப்பது மிக்க சுவை..

வாணி – இன்றைய சாமந்திப்பூ தேனீர்ரில் பேரிக்காய் என்னும் பழத்தைப் பயன்படுத்துகின்றோம். பேரிக்காய் பழத்தில் சர்க்கரை அதிகம். இதைச் சாப்பிடுவதன் மூலம், இருமலை தடுத்து, சளியை இணக செய்யலாம். தன்மை உள்ளது. தவிர, இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், தூக்கமின்மைமுதலிய பல நோய்களுக்கு குணம் தரும் நல்ல பயன் உள்ளது.

க்ளீட்டஸ் – சீனாவில் ஒரு பழ மொழி இருக்கின்றது. அதாவது, துணைப் உணவுப்பொருட்களின் பயன் மருந்தை விட அதிகம். அப்படி தானே

வாணி – நீங்கள் சொன்னது சரி. ஆகவே அன்றாத வாழ்க்கையில் மருந்து திறன் கொண்ட தேனீர் உட்கொள்வது உடல் நலத்திற்கு நன்மை. நேயர்கள் இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.