........வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் 'சீனாவின் விளையாட்டுப் பொம்மைகளின் தரம்' என்ற கட்டுரையைக் கேட்டேன். குழந்தைகளின் உள்ளங்கவரும் பொம்மை என்றாலே, அது சீனாவில் தயார் செய்யப்பட்ட பொம்மைதான் என்ற நிலை, தற்போது உலகெங்கும் உருவாகிவிட்டது. இந்திய சந்தைகளில், எந்த ஒரு கடைக்கு சென்றாலும், அங்கே Made in China என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொம்மைகளே ஏராளமாக நிறைந்திருக்கும். சீனப் பொம்மைகள் இல்லாத எந்த ஒரு கடையும் இல்லவே இல்லை என்ற நிலையில், சீனப் பொம்மைகளின் தரத்தின் மீது அமெரிக்க நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டி, சுமார் இரண்டு கோடி பொம்மைகளை திருப்பி அனுப்பியுள்ளது என்பதை அறியும்போது, வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. எந்த ஒரு தொழிலிலும் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.
பொறாமை இருக்கக் கூடாது. ஆனால், அமெரிக்க நிறுவனத்தின் செயலில் நான் வருத்தம் கொள்கின்றேன். ஆனபோதிலும், சீனப் பொம்மைகள் மீது எழுப்பப்பட்ட குற்றச் சாட்டுக்களை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கும் சீன அரசையும் இந்த நேரத்தில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சீன வானொலிப் பணியாளர்கள் அன்பளிப்பாக வழங்கிய சீனாவின் பல பொம்மைகள் என் குழந்தைகளிடம் உண்டு. ஆனால், எந்தவொரு பொம்மையாலும் என் குழந்தைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நன்றி. வணக்கம். ....... சேந்தமங்கலம் கே.சுந்தரம்
வறிய குடும்பங்களில் வாழ்கின்ற மாணவர்களுக்கு கல்விக் கடன் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று அறிந்தேன். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வித் துறையில் தான் உள்ளது என்பதால் கல்விக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கிறது இந்தியாவிலும் உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்விக் கடன் இதே போல் வழங்கப் படுகிறது மருத்துவத் துறை பொறியியல் துறை ஆகிய துறைகளில் பயில்கின்ற மாணவர்களுக்கும் கடன் உதவி செய்யப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான திட்டங்களை மேற்கொள்கிறன என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். ......... வளவனூர் முத்துசிவக்குமரன் இன்று நமது இணைய தளத்தை கண்டேன். சர்வதேச கவிதை திருவிழா சிங்ஹாய் மாநிலத்தின் சி நிங் நகரில் 200க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்து கொள்ள இனிதாய் தொடங்கியது என்ற தகவலை தெரிந்து கொண்டேன். மனிதர், இயற்கை மற்றும் இணக்கமான சமூகம் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமான, இன்றைய கால கட்டத்துக்கு தேவையான தலைப்பு ஆகும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளும் கவிஞர்கள், தங்களின் படைப்புகளை மனித சமுதாயத்துக்கு உதவிடும் வகையில் அளித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அது போல் நிறைவேற்றப்பட்ட பெய்ஜிங்கின் வாக்குறுதிகள் என்ற தலைப்பிலான செய்தியையும் படித்தேன். சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு அளித்த வாக்குறுதிகளின் படி, பெய்ஜிங் நகரத்தை பசுமையாக்கம் செய்து நகரை அழகு படுத்தும் பணியுடன், உயிரின வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் சிறப்பான பணியாக்கமும் நடைபெற்று வருகிறது என்ற தகவலும், சீனா எந்த செயலில் ஈடுபட்டாலும், அதனை செவ்வனே செய்து முடிக்கும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
|