• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-06 15:42:11    
சீன விருந்து இங்கிதங்கள்

cri

கைகளால் உணவருந்துவதை சுகாதாரமற்றதாக நாகரீகமற்றதாக நினைப்பவர்கள் இன்றைக்கும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் கரண்டிகள், குழிக்கரண்டி, கத்தி இவையெல்லாம் சாப்பிடும் போது பயன்படுத்தப்படும் கருவிகள்.

ஆனால், உணவை உண்ணும் போது, வன்மையான அடையாளங்கள், கருவிகள் இடம்பெறக்கூடாது என்பதாலோ என்னவோ, சீன உணவு வழக்கத்தில் கத்தி, முள் கரண்டி இவையெல்லாம் பயன்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில் சாப்ஸ்டிக்ஸ் என்றும் சீன மொழியில் குவய்சு என்றும் அழைக்கப்படும் இரு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்களே இந்த சாப்ஸ்டிக்ஸ் எனப்படும் குச்சிகளை கண்டுபிடித்தவர்கள் என்று நம்பப்படுகிறது. சீன மாமேதை, தத்துவச் சான்றோர், கன்பிஃ.யூசியஸின் சிந்தனைகளால் வளர்ந்த சீனர்கள், கத்தியையும், முள் கரண்டியையும் வன்முறையின் அடையாளங்களாகவே பார்க்கின்றனர். மேலும் கன்பிஃயூசியஸ் அவர்கள்தான் குச்சிகளின் பயன்பாட்டை பெரிதும் வலியுறுத்தியவர் என்று கூறப்படுகிறது. கரண்டிகள், கத்திகள் இவையெல்லாம், ஐரோப்பியர்களால் கண்டிபிடிக்கப்பட்டு உணவருந்து கருவிகளாக பயன்படுத்தத் தொடங்கிய ஆண்டுகளுக்கு முன்னரே குச்சிகளால் சாப்பிடத் தெரிந்தவர்கள் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


3000 ஆண்டுகளுக்கு முன்னதாக இக்குச்சிகளின் பயன்பாடு பரவலாகக் காணப்பட்டுள்ளமைக்கு சான்றுகள் பல உள்ளன.
சீனாவிலிருந்து இதர ஆசியப் பகுதிகளுக்கு இந்த குச்சிகளின் பயன்பாடு பரவியது. ஜப்பான், கொரியா, தாய்லாந்து வியட்நாம் ஆகியவற்றிலும், குச்சிகள் பரவலாகத் தொடங்கி இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் சாப்ஸ்டிக்ஸ் காணப்படுகிறது.
இந்த குச்சிகளை பற்றி சொல்லத் தொடங்கினால் அதற்கே ஒரு சிறப்பு நிகழ்ச்சியை அளிக்க வேண்டியிருக்கும். எனவே, இப்போதைக்கு இத்துடன் நிறுத்துவோம்.
சீன உணவுகளில் சில வகைகள், சிறப்புப் பொருள் கொண்டவையாக கருதப்படுகின்றன. சில உணவு வகைகளை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அல்லது சமயத்தில் குறிப்பிட்ட சிலர் விருந்தில் அளிப்பதை நாம் கவனிக்கலாம்.

ஆடி மாதம் கூழ், பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, தையில் பொங்கல், இவையெல்லாம் எப்படி அந்தந்த நாட்களில், மாதங்களில் சிறப்புப் பொருள் கொண்டவையாக உள்ளனவோ, அதைப் போல சீனாவில் நாம் குறிப்பிட்ட விழாக்களில், குறிப்பிட்ட சில உணவு வகைகள் பரிமாறப்படுவதை காணலாம். மேலும், இந்த குறிப்பிட்ட உணவு வகைகளுக்கென, தனி அர்த்தங்கள் உண்டு.