• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-08 15:51:19    
இணக்க சமூகமும் இணக்க உலகமும்

cri

கலை......வணக்கம் நேயர்களே. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தமிழன்பன்.........ஆமாம். தற்போதைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் சீன சமூகம் பற்றியும் கூடுதலாக அறிந்து கொள்ள முடியும்.

கலை......தமிழன்பன் சரியாக சொன்னீர்கள். கடந்த நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு, அறிவியல்பூர்வமான வளர்ச்சி கண்ணோட்டம் ஆகியவை பற்றி விவாதித்தோம்.

தமிழன்பன்......ஆமாம். இவ்விரண்டு தொகுதிகளை ஒப்பீட்டளவில் அறிந்து கொண்டுள்ளேன். நேயர்களே என்னை போல இவற்றை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

கலை.......இதை கேட்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தமிழன்பன்.......கலை இன்றைய நிகழ்ச்சியில் நாம் எது பற்றி விவாதிக்கின்றோம்?

கலை.....தமிழன்பன் இன்று நாம் இணக்க சமூகமும் இணக்க உலகமும் பற்றி முதலில் விவாதிக்கலாமே.

தமிழன்பன்.......அப்படியானால் சீனாவில் இணக்க சமூகம் உருவாக்குவது என்பது எதை குறிக்கின்றது?

கலை........சீனாவில் இணக்க சமூகம் உருவாக்குவது என்றால் சீனாவில் ஜனநாயக சட்ட ஆட்சி, நீதி நியாம், நம்பிக்கை நிறைந்த நட்பு, முழுமையான உயிராற்றல், அமைதியான ஒழுங்கு, மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான இணக்கம் ஆகியவை இடம் பெறுகின்ற சமூகம் இணக்க சமூகம் என்று பொருள்படுகின்றது.

தமிழன்பன்......இந்த கருத்து எப்போது எந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது?

கலை......இந்த கருத்து 2004ம் ஆண்டில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வில் முன்வைக்கப்பட்டது.

தமிழன்பன்........என்ன காரணத்திற்காக ஒரு முக்கிய கடமையாக இந்த கருத்து முன்வைக்கப்பட்டது?

கலை.....ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் நிறுவி சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷ்லிச லட்சியம் என்ற புதிய நிலைமையைத் துவக்கும் வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த முக்கிய கடமையாக இது திகழ்கின்றது.

தமிழன்பன்.......மிக பல பொது மக்களின் அடிப்படை நலனையும் பொது விருப்பத்தையும் இந்த கருத்து எடுத்துக்காட்டுகின்றது என்று கருதுகின்றேன்.

கலை.......சரி தான். அடுத்து இணக்க உலகம் பற்றி நாம் ஆராயலாமா?

தமிழன்பன்......சீனாவைப் பொறுத்தவரை இணக்க உலகம் என்பது எதை குறிக்கின்றது?

கலை....சர்வதேச உறவை கையாளும் போது சீனா பல தரப்பு வாதத்தில் ஊன்றி நிற்பதன் மூலம் கூட்டு பாதுகாப்பை நிறைவேற்ற பாடுபடும். ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் அதேவேளையில் கூட்டு செழுமையை நனநாக்க வேண்டும். மற்றவரின் மீதான சகிப்பு தன்மையில் ஊன்றிநின்று கூட்டாக இணக்கமான உலகத்தை நிறுவ வேண்டும். இந்த கண்ணோட்டம் இணக்க உலகம் என்பதாகும்.

தமிழன்பன்.......யார் எந்த இடத்தில் இதை முன்வைத்தார்?

கலை.....2005ம் ஆண்டில் ஐ.நா நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவை கொண்டாடிய உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் உரைநிகழ்த்திய போது இந்த கண்ணோட்டத்தை முன்வைத்தார்.

தமிழன்பன்...... தூதாண்மை உறவை மற்ற நாடுகளுடன் வளர்ப்பதில் சீனா பின்பற்றும் குறிக்கோளும் உலகளாவிய நெடுநோக்கு திட்டத்தின் மையப் பகுதியும் இந்த கண்ணோட்டத்தில் குவிந்த முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

கலை.......நீங்கள் சரியாக இந்த எண்ணத்தை கண்ணோட்டத்தை தொகுத்துக் கூறியுள்ளீர்கள்.

தமிழன்பன்........பாராட்டுக்கு நன்றி. "இணக்க சமூகம்","இணக்க உலகம்"என்ற கண்ணோட்டங்கள் கடந்த சில ஆண்டுளில் நடைமுறைபடுத்தப்பட்ட பின் சீனாவின் அமைதி வளர்ச்சிக்கான இரண்டு பெரிய மதிப்புக்குரிய கண்ணோட்டங்களாகி விட்டன. அப்படித்தானே?

கலை........ஆமாம். உலகின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் சீன இணக்க வளர்ச்சி தேவைப்படும். அது போல சீனாவில் வளர்ச்சியும் செழுமையும் இணக்க வளர்ச்சி உலகத்துடன் இணைபிரியாதவை.

தமிழன்பன்.......ஆகவே "இணக்க சமூகம்""இணக்க உலகம்" இரண்டும் பரஸ்பரம் சார்ந்திருக்கின்றன.

கலை........ஆமாம். இணக்க சமூகத்தை நிறுவும் போது இணக்க உலகக் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு புதிய உந்து ஆற்றலை வழங்குவது திண்ணம்.

தமிழன்பன்......இணக்க உலகக் கட்டுமானத்தை சீனா முன்னேற்றும் போது இணக்க சமூகத்தை நிறுவுவதற்கென சாதகமான சர்வதேச சூழலை உருவாக்குவது உறுதி.