• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-07 15:55:35    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி செய்திகள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழு வெளியிட்ட 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீப தொடரோட்ட கால அட்டவணையை, சீனாவின் சன்சி மாநிலத்தின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு செய்தியாளர்களிடம் அறிவித்தது.

இக்கால அட்டவணைக்கிணங்க, 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம், 2008ம் ஆண்டு மார்ச் 24ம் நாள், கிரேக்கம் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படும். அதையடுத்து, கிரேக்கத்தில் தீப தொடரோட்டம் நடைபெறும்.
மார்ச் 30ம் நாள், கிரேக்க தலைநகர் Athensஸில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவிடம் தீபம் ஒப்படைக்கப்படும். மார்ச் 31ம் நாள் இத்தீபம், பெய்ஜிங் மாநகரை அடையும்.
ஏப்ரல் 1ம் நாள் முதல், மே 3ம் நாள் வரை, , வெளி நாடுகளில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீப தொடரோட்டம் நடைபெறும். 2380 பேர், இத்தொடரோட்டத்தில் கலந்துகொள்வர்.

 

மே 4ம் நாள் முதல், ஆக்ஸ்ட் 8ம் நாள் வரை, ஒலிம்பிக் தீபம் தொடரோட்டம், சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள், அரசின் நேரடி தலைமையின் கீழுள்ள மாநகரங்கள் ஆகிய 113 இடங்களில், நடைபெற உள்ளது.
உள்நாட்டு மக்கள் எதிர்பார்த்த, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நுழைவு சீட்டு விற்பனை செய்வதில் 2வது கட்ட பணி, அக்டோபர் 30ம் நாள் துவங்கியது. 30ம் நாள் காலையில், 9 மணி முதல், 10 மணி வரை, 80 இலட்சம் மக்கள், அதிகாரப்பூர்வமாக இணையத்தின் மூலம் சீட்டு வாங்க விண்ணப்பம் செய்தனர். பல பல விண்ணப்பங்கள் ஒரே நேரத்தில் ஒப்படைக்க பட்டதால், இணைய சிக்கல் ஏற்பட்டது. எனவே, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்பு குழுவின் நுழைவுச்சீட்டு மையம், சிக்கலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரியது.

தொடர்புடைய தொழில் நுட்ப ஒத்துழைப்பு கூட்டாளிகளுடன் கலந்தாய்வு செய்த பிறகு, மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில், 2வது சுற்று விற்பனை பணியை தற்காலிக நிறுத்துவதென நுழைவுச்சீட்டு மையப் பொறுப்பாளர் ஒருவர் அறிவித்தார்.

மனித முதன்மை, நேர்மை, நியாயம், பொது மக்களுக்கு வசதி வழங்குவது என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்கும் வகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீட்டின் 2வது சுற்று விற்பனை பணியில் மாற்றம் செய்யப்பட்டுதுள்ளது.

2வது சுற்று விற்பனை பணி, டிசம்பர் 10ம் நாள் முதல், 30ம் நாள் வரை, வாங்க பதிவு செய்வதென விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளயுள்ளது.