• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-08 13:06:40    
கண்ணைக் கவரும் ஹுவாங் ஷான் மலை(இ)

cri
இங்கிருந்து பார்த்தால் மூங்கில்த் தளிர்ச்சிகரம் தென்படுகின்றது. அதன் கவர்ச்சியான வடிவங்களில் அமைந்த பாறைகளின் இடையே, ஒரு படகில் ஐந்து வயோதிபர்கள் மற்றும் கடல் கடக்கும் எட்டுத் அர மகளிர் சிலைகள் கொண்ட பாறைகளும் இருக்கின்றன.
"மலர் சொரி பள்ளம்"என்பது வரிசையான மலை முகடுகள் சூழ்ந்த ஒரு சிறிய நதிப்படுகை ஆகும். வியத்தகு கல்தூண்களைச் சுற்றி வகைவகையான மலர்களும் புற்களும் வளர்கின்றன. வசந்த மற்றும் கோடை காலங்களில் இந்தப் படுகை, மலர்களின் வண்ணச்சோலையாக துலங்குகின்றது. இதன் ஒரு பக்கத்தில், சீன எழதுகோல் போன்ற முனையுடைய நீண்ட கல்தூண் நிற்கிறது.
உஹுவாங் ஷான் மலையில் மிக வியக்கத்தக்கது யாதெனில் அங்கு தோன்றும் முகில் கடலாகும். அதிகாலையில், குறிப்பாக, மழைபெய்த பின்னர், முகில் கடல் புகுந்துள்ள மலை இடுக்குகளும் கணவாய்களும் பயணிகள் பார்வைக்கு விருந்தாகின்றன.
கோடைக்காலத்தில் காலை மூன்று அல்லது நான்கு மணியளவில், காலை சூரியனின் கதிரொளியில் முதலில் காட்சியளிப்பவை இங்குள்ள எண்ணற்ற சிகரங்களேயாகும். கீழ்வானம் வெளுக்கத்தொடங்கியதும் அவ்விடமெல்லாம் ஒளிமயமாகின்றது.
ஹுவாங் ஷானில் காலைப்பொழுதானது, அற்புதமான முகில் வடிவங்களைக் கொண்டு வருகின்றது. திடீரென்று சூரியன் என்ற தீக்கோளம் கீழ் அடிவானத்தில் எழுகின்றது. அதன் கதிர்கள் படிந்ததும் பல்வேறு வடிவங்களில் தோன்றும் முகில் கூட்டங்களும் கம்பீரமாக நிற்கும் சிகரங்களும் பைன்மரங்களும் ஒளியில் தகதகவைன...லிக்கின்றன.
பெய் ஹாய் ஹோட்டலிலிருந்து கீழே இறங்கும் சாய்வானது, கிழக்கு நோக்கிச் செல்கிறது. மூங்கில் கடல்களும் நீர்வீழ்ச்சிகளும் வழியை அலங்கரிக்கின்றன. அங்குள்ள வெண் நாகக்குளம், பச்சைவாவி, மரகதக்கேணி ஆகிய நீர்நிலைகள் பசுமையான சாரல்களில் முத்துகள் பதித்தாற்போல் தோன்றுகின்றன. பைன் பள்ளத்தாக்கு ஆலயத்துக்கு அண்மையிலுள்ள மரகதக்கேணியானது, சூரியன் பிரகாசிக்கும் போது, அதன் தெளிந்த நீரில் மாபெரும் பாறைகளையும் பைன் மரங்களையும் பிரதிபலிக்கின்றது. அவ்வற்புதக்காட்சி உண்மையில்"வானுலகின் கீழ் மிக வசீகரமானது"என்பதில் ஐயமேயில்லை.
1990இல், யுனெஸ்கோ அமைப்பு, உஹுவாங் ஷான் மலையை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040