ஊக்கமருந்துக்கு எதிரான கட்டுப்பாடு
cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் சிறந்த சூழலை உருவாக்கும் பொருட்டு, சீனாவில் ஊக்கமருந்துக்கு எதிரான சிறப்புக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படும் என்று சீனத் தேசிய உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் Yan Jiang Ying அம்மையார் கூறியுள்ளார். 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடையும் வரை, இச்சிறப்புக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணி முடிவடைந்த பின், இதன் அடிப்படையில், அன்றாட கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பணியை மேலும் தமது அலுவலகம் செயல்படுத்தும் என்று Yan Jiang Ying அம்மையார் கூறினார். மருந்துகளின் தயாரிப்பு மற்றும் அலுவல் தொழில் நிறுவனங்களைத் தவிர, வேதியியல் பொருட்களின் தயாரிப்பு மற்றும் அலுவல் நிறுவனங்களையும் கண்காணித்து, சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
|
|