• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-08 20:01:57    
பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகம்

cri

பெய்ஜிங்கில் பேய் குங் பாங் என்ற சிறப்பான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில், அரண்மனை பூத்தையல், ஜேடு, அரக்குப் பொருட்கள், காகித கத்தரிப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேலான சீனப் பாரம்பரிய கலைப்பொருட்கள், சேமித்து வைக்கப்படுகின்றன.


இவ்வருங்காட்சியகம், பெய்ஜிங் மாநகரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான மண்டபத்தில் 30க்கு அதிகமான பணி அறைகள் உள்ளன. இவற்றில் பாரம்பரிய அரண்மனை மற்றும் நாட்டுப்புறக் கலைப்பொருட்கள், தயாரிக்கப்படுகின்றன. சர்வதேச சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் எரிக் துலுக், பேய் குங் பாங் என்னும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு, இது, புகழ்மிக்க பிரான்ஸ் Louvre அருங்காட்சியகத்தை போல, சீனாவின் Louvre அருங்காட்சியகம் என பாராட்டினார். இவ்வருங்காட்சியகத்தின் பணியாளர் TAO YE கூறியதாவது:
உண்மையில், பேய் குங் பாங், மிகவும் சிறப்பான அருங்காட்சியகம் ஆகும். இதில், கலைப்பொருட்களை, வழிகாட்டிகள் மூலம் பயணிகளிடம் அறிமுகப்படுத்துவது, அல்லது நிழற்படங்கள் மற்றும் பொருட்களைக் காட்சிக்கு வைப்பது மட்டுமல்லாது. கைவினை பொருட்காட்சி மூலம், பயணிகள், அக்கலைஞர்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம். பயணிகளின் கேள்விகளுக்கு, கலைஞர்கள் அவ்வப்போது பதிலளிக்கின்றனர் என்றார் அவர்.


தற்போது, பேய் குங் பாங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய அரண்மனை கலைப்பொருட்கள், பத்துக்கு மேலான வகைகளாகும். இதில், பெய்ஜிங் பூத்தையல் குறிப்பிடத்தக்கது. இது, அரண்மனை பூத்தையல் எனவும் அழைக்கப்படுகிறது. அரச குடும்பங்கள் மற்றும் உயர் குடி மக்களின் ஆடைகளில் மட்டும், பயன்படுத்துவது என்பது, அதன் பொருளாகும். புகழ்பெற்ற பெய்ஜிங் பூத்தையல் கலைஞர் YAO FU YINGக்கு, இவ்வாண்டு 66 வயது. அவர் 48 ஆண்டுகளாக பெய்ஜிங் பூத்தையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் கூறியதாவது:
பொதுவாக கூறின், பெய்ஜிங் பூத்தையல் கலைப்பொருட்களின் ஒவ்வொரு படத்திற்கும் அதற்கான சிறப்பு பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களும், தற்போது மங்கலமாகி விட்டன. அதன் ஒவ்வொரு படங்களுக்கும் தத்தமது பண்பாட்டு உள்ளடகத்தையும் குறிப்பிட்ட பொருளையும் கொண்டுள்ளன என்றார் அவர்.


பெய்ஜிங் பூத்தையல்கள் பல்வகையானவை. அரசரின் டிரேகன் ஆடை உள்ளிட்ட சில பூத்தையல் படங்கள், விருப்ப படி பயன்படுத்தப்பட கூடாது. இது குறித்து, YAO FU YING அறிமுகப்படுத்துகையில், பண்டைகாலத்தில், அரசர் அதியுயர் தலைவராவார். டிரேகன், அரசரின் அடையாளமாக, அதிகாரத்தைக் காட்டுகிறது. இதனால், டிரேகன் ஆடையைப் பூத்தையல் வேலையில், துணி, நூல், அலங்காரப்பொருட்கள் முதலியவை, தர மிக்கவை என்று கூறினார்.
பெய்ஜிங் பூத்தையல் கலைப்பொருள் ஒன்றுக்கு, பத்துக்கு மேலான செய்தல் முறைகள் தேவைப்படுகிறது. கைதேர்ந்த பூத்தையல் கலைஞர், டிரேகன் ஆடையைத் தயாரிப்பதற்கு, குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவை. அழகான படம், தலைச்சிறந்த பூத்தையல் தொழில் நுட்பம், ஆழமான பண்பாட்டு உள்ளடக்கம் ஆகியவற்றினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளும், கலைப்பொருட்களைத் திரட்டுபவர்களும், பெய்ஜிங் பூத்தையல் கலைப்பொருட்களை, மதிப்புக்குரிய அரியபொருட்களாக சேமித்து வைத்துள்ளனர்.
அழகான பெய்ஜிங் பூத்தையல் பொருட்களைப் பார்த்த பிறகு, ஜேடு சிற்பக் கலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜேடு சிற்ப வேலையில் 30க்கு அதிகமான ஆண்டுகள் ஈடுபட்ட கலைஞர் YANG YU ZHONG கூறியதாவது:


தரமிக்க மூலப்பொருள், தலைச்சிறந்த வடிவமைப்பு, உணர்ப்பூர்வமான தயாரிப்பு ஆகியவை, தலைச்சிறந்த ஜேடு சிற்பப் படைப்புக்கான முக்கிய காரணிகளாகும் என்றார் அவர்.