• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-09 10:33:24    
சீனாவின் திபெத் இனம்

cri

திபெத் இன மக்கள், முக்கியமாக திபெத் தன்னாட்சிப் பிரதேசம், ச்சிங்கை haibei, huangnan, guoluo முதலிய தன்னாட்சி சோகள், gansu Sichuan ganzi yunnan மாநிலங்களின் தன்னாட்சி சோகள் முதலிய இடங்களில் கூடி வாழ்கின்றனர். இதன் மொத்த மக்கள் தொகை, 45 இலட்சத்து 90 ஆயிரமாகும்.

திபெத் மக்கள், தங்களை போ பா என்று அழைக்கின்றனர். இதற்கு, வேளாண்மையில் ஈடுபடுகின்ற மக்கள் என்பது பொருள். அவர்கள், தொடக்கத்தில் yaluzangbu ஆற்றுப்பள்ளதாக்கில் வளரத் தொடங்கிய வேளாண்மை பழங்குடியாகும். 1965ம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது.

திபெத் இன மக்கள் சொந்த மொழியையும் எழுத்துகளையும் கொண்டுள்ளனர். திபெத் மொழி, சீன-திபெத் மொழிக் குடும்பத்தின் திபெத்-மியான்மார் கிளையைச் சேர்கிறது. இது, Weizang, kangfang, anduo என்ற 3 வட்டார மொழிகளாக பிரிக்கப்படுகிறது.

ஹ டா வழங்குவது, திபெத் மக்கள் விருந்தினருக்கு மிக அதிகமான மதிப்பு அளிக்கின்ற பண்பான நடத்தையாகும். ஹ டா என்பதற்கு திபெத் மொழியில் தலைக்குட்டை என்பது பொருள்.

திபெத் மக்கள் புத்த மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். புத்த மதத்தில் சில உள்ளூர் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சேர்த்து, திபெத் இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புத்தமதம் உருவாகியுள்ளது.

கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, திபெத் பிரதேசப் பொருளாதாரத்தின் முக்கிய பணிகளாகும்.

முன்பு திபெத் மக்கள் சாப்பிட்ட காய்கறி வகைகள் மிக குறைவு. ஆட்டு மாட்டு இறைச்சிகள் அதிகமாக சாப்பிடுகின்றனர். Su you cha என்னும் ஒரு வகை பட்டார் தேனீர் மிக அத்தியாவசியமானதாக அனைவரும் கருதுவதோடு, பாலையும் அருந்துகின்றனர். அவர்கள் பொதுவாக சிங்கோ பார்லியாலான சிங்கோ மது அருந்த விரும்புகின்றனர்.

திபெத் நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் முதலாவது திங்களின் முதல் நாள், புத்தாண்டு விழாவாகும். இது திபெத் மக்களின் மிக முக்கிய பாரம்பரிய திருநாளாகும். எனவே கடந்த ஆண்டு 12வது திங்கள் முதல் இவ்விழாவைக் கொண்டாட அவர்கள் ஆயத்தப்படுத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கி, guoziஎன்ற உணவு சமைத்து, புத்தாண்டுக்கு முந்தைய மாலையிலேயே சுற்றுபுறங்களைத் துப்புரவு செய்கின்றனர்.