9வது சாங்காய் சர்வதேசக் கலை விழாவில், 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த கலைஞர்கள் கலந்துகொண்டு பல்சுவையான கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பல்வேறுபட்ட பண்பாடுகள் இதில் சந்தித்தின.

சாங்காய் சர்வதேசக் கலை விழா, 9 முறைகள் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன மற்றும் அந்நிய கலைஞர்கள் தங்கள் புதிய படைப்புகளை காட்சிக்கு வைத்து, கலை பரிமாற்றத்தை மேற்கொண்டனர். புதியப் படைப்புக்களை உருவாக்குவது சாங்காய் சர்வதேசக் கலை விழா பின்பற்றும் கொள்கையாகும். ஆண்டுதோறும், இக்கலை விழாவின் துவக்க விழாவில் மூலப் படைப்புகளை கண்டுகளிக்கலாம். இது இவ்விழாவின் பாரம்பரியமானது. சீன மன்னரின் துணை மனைவி, farewell my concubine, Dream of the red chamer ஆகிய மூலப் படைப்புக்கள், இக்கலை விழா மூலம் வெளிநாட்டினரால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அத்துடன், வெளிநாடுகளில் இந்நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாண்டு, dragon இன் குரல் என்ற பெரிய ஆடல் பாடல் நடனம் கண்டு கழிக்க ஏற்பாடு செய்து வருகின்றோம் என்று சாங்காய் சர்வதேசக் கலைவிழாவின் தலைமை அதிகாரி chensheng கூறினார்.
சாங்காய் ஆடல் பாடல் குழு மற்றும் கீழை இளைஞர் நடனக் குழுவால் படைக்கப்பட்ட dragon இன் குரல் என்ற ஆடல் பாடல் நடனம், இக்கலை விழாவின் துவக்க விழாவில் அரங்கேற்றப்பட்டது. 'மேளம்' என்ற தலைப்பிலான சீனப் பாரம்பரிய நடனம் அதன் ஈர்ப்பு ஆற்றலைப் பிரதிபலித்தது. சுமார் 100 மேளங்கள், முன்னேறிய தொழில் நுட்பங்த்தின் உதவியுடன் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதன் மூலம், சீனப் பாரம்பரியக் கலைகள், நவீன தொழில் நுட்பங்களை இணைத்துள்ளன என்ற விமர்சனத்தை பல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நண்பர்களே, சாங்காய் சர்வதேசக் கலை விழா என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|