• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-12 16:33:55    
Formula 1 கார் பந்தயம்

cri

உலக வீரர் Alonsoஉடனான Mclaren அணி உடன்படிக்கையை 2 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே நீக்கியுள்ளது. இதனால் ஸ்பெயின் நாட்டவருக்கும் அணிக்குமிடையிலான முரண்பாடு முடிவடைந்துள்ளது என்று Mclaren அணி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Alonsoஉக்கும் அணிக்குமிடையிலான முரண்பாடு இனிமேல் இணக்கம் செய்யாததினால் முடிய, ஸ்பெயின் நாட்டவர் Mclaren அணியிலிருந்து உடனடியாக வெளியேறுகின்றனர். அன்றியும், அவர்கள் அபராகமாக எந்த தொகையையும் கொடுக்க வேண்டியதில்லை. இதர அணிகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பிரேசில், 2014ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையையும் ஜெர்மனி, 2011ம் ஆண்டு மகளிர் உலக கோப்பையையும் ஏற்பாடு செய்யவுள்ளன. உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் Blatter அகடோபர் 30ம் நாள் Zurichஇல் இதை அறிவித்தார்.

பிரேசில், 1950ம் ஆண்டில் 4வது ஆடவர் கால்பந்து உலக கோப்பையை ஏற்பாடு செய்து, இரண்டாவது இடத்தைப் பெற்றது. வரலாற்றில், அனைத்து 18 கால்பந்து உலக கோப்பைகளின் இறுதிப் போட்டி கட்ட ஆட்டங்களிலும் கலந்துகொண்ட ஒரே அணி பிரேசிலாகும். இது ஆடவர் கால்பந்து உலக கோப்பைவரலாற்றில், 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 2 முறை இரண்டாவது இடத்தையும் பெற்றிருப்பது, குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முன் சீனாவில் நடைபெறுகின்ற நாடளவிலான பன்நோக்கு விளையாட்டு போட்டியாகிய, 6வது சீன நகர விளையாட்டு போட்டி நவம்பர் 3ம் நாள் சீனாவின் மையப்பகுதியான Wu Han நகரில் முடிவடைந்தது. சீன தேசிய விளையாட்டு ஆணையத் தலைவர் Liu Peng, துணைத் தலைவர்களான XiaoTian, Duan Shijie, Wang Jun, Cai Zhenghua ஆகியோரும் Wu Han நகர விளையாட்டு போட்டி அமைப்புக் குழு தலைவர், Hu Bei மாநிலத்தின் தலைவர், Wu Han நகரின் தலைவர்கள் ஆகியோரும் நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.

வரலாறு காணாத மிகப் பெரிய நகர விளையாட்டு போட்டி இதுவாகும். 74 நகரங்களைச் சேர்ந்த 6351 வீரர்களும் வீராங்கனைகளும் இறுதி கட்ட போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில், வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளனர். 7வது சீன நகர விளையாட்டு போட்டி Hu Bei மாநிலத்தின் Nan Chang நகரில் நடைபெறும்.