• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-13 15:53:23    
மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறை (ஆ)

cri

மிங் வம்சப் பேரரசர்களின் கல்லறை, 1957ம் ஆண்டு, பெய்ஜிங் மாநகரின் தொல்பொருள் பாதுகாப்பு இடங்களின் முதல் தொகுப்பில் ஒன்றாகியுள்ளது. 1961ம் ஆண்டு, நாட்டின் முக்கிய தொல்பொருள் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டது. 1982ம் ஆண்டு, இது, பா தா லிங் பெருஞ்சுவருடன், 44 முக்கிய தேசிய சுற்றுலா பாதுகாப்பு இடங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டின் ஜூலை திங்கள், ஐ.நாவின் யுனிஸ்கோ உலக மரபுச் செல்வக் குழுவின் 27வது கூட்டத்தில், இதுவும் நான் சிங் நகர் மிங் Xiao கல்லறையும், மிங் மற்றும் சிங் வம்சப் பேரரசர் குடும்பங்களின் கல்லறைகளின் பரவல் திட்டப்பணிகளாக, உலக மரபுச் செல்வத் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைகள், பெய்ஜிங், ஹேபேய், லியாவ்நிங், ஆன்ஹீய், ஜியாங்சு முதலிய இடங்களில் அமைந்துள்ளன. அவை, சீனாவின் மிங் மற்றும் சிங் வம்சங்களின் பேரரசர்களின் கல்லறை கட்டுமானங்கள் ஆகும். அவை, தகுநிலைக் கேற்ப கண்டிப்பான முறையில், அமைக்கப்பட்டுள்ளன. முழுமையான தரை மற்றும் தரைக்கடிக் கட்டுமான அமைப்பைக் கொண்டு, பெரிய அளவில், மிகுந்த கலையழகுடன், நிலப்பிரபுத்துவ முறையின் மிக உயர் நிலை ஈமச் சடங்கு அமைப்பு முறையை இவை காட்டுகின்றன.

Chang கல்லறை: தியான் சோ மலையின் அடியில் அமைந்துள்ளது. இது, மிங் பேரரசர் ச்சூ தீ மற்றும் அவரது பேரரசி ச்சியூவின் கல்லறை. இது, 13 கல்லறைகளில் மிகப் பெரிய கல்லறை ஆகும். இது, 1413ம் ஆண்டு, கட்டிமைக்கப்பட்டது. முழு கல்லறை, சுவர்களால் சுற்றி, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு, Ling en வாயில், Ling en மண்டபம், Baocheng மாளிகை, மிங் லோ மாளிகை முதலியவை இருக்கின்றன. Baocheng மாளிகை, செங்கற்களால் அமைக்கப்பட்டு, வட்ட வடிவில் இருக்கிறது. அதன் விட்டம், 340 மீட்டராக, சுற்றுப்பரப்பு, 1 கிலோமீட்டர் மேலாக இருக்கிறது. அதன் தென் பகுதியின் மையத்தில் ஒரு வாயில் உள்ளது. இவ்வாயில் மூலம், மிங் லோ மாளிகைக்குள் நுழையலாம். இம்மாளிகை, செங்கோன வடிவில் இருக்கிறது. அதன் உச்சி, மஞ்சள் நிறக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கூரையின் கீழே, Chang ling என்ற இரு சீன எழுத்துக்கள் காணப்பட்டுள்ளன. மாளிகையின் நடுவில், ஒரு சின்னம் உள்ளது. இதில், Cheng zu wen பேரரசரின் கல்லறை என்ற சில சீன எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன.