• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-13 21:19:04    
சீனாவில் பாதுகாப்பு மண்டலங்கள்

cri

கலை: சீனாவில் இப்போது 200 பாதுகாப்பு மண்டலங்கள் இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்காக நிறுவப்பட்ட செய்தியை அறிந்துகொண்டேன். கடல் வழியே 30 பாதுகாப்பு மண்டலங்கள் மற்றும் நன்னீர் பாதுகாப்பு மண்டலங்கள் நூற்றுக்கு மேலும் நிறுவி இருப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலை நிறுத்தப்பட்டு, உயிரின வாழ்க்கைச் சூழல் உருவாக்கப்படும் என்று நம்புவோம்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி மு. அ. பர்மிளா பானு எழுதிய கடிதம். சின வானொலி நிகழ்ச்சிகள் என்னை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சிகளாகும். வெளி நாடுகள் பலவற்றை பற்ரி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிரது. என் கல்வி வளர்ச்சிக்கும் சீன வானொலி பயனுள்ள பங்களிப்பு நல்குகிறது. இப்படிப்பட்ட வானொலியில் நானும் நேயராக இருக்க விரும்புகிறேன். சீன வானொலியை என்னைப் போலவே இலங்கையில் பலரும் கேட்கின்றனர். என்னையும் நேயராக இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.


கலை: அன்பு பர்மிளா பானு, உங்கள் விருப்பப்படியே சீன வானொலிக் குடும்பத்தில் உங்களையும் ஒரு நேயராக இணைத்துக்கொள்வதில் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். எமது நிகழ்ச்சிகளைக் கேட்டு, அதை பற்றிய கருத்துக்களையும் எமக்கு எழுதி அனுப்புங்கள்.
தொடர்ந்து தருமபுரி, ராமியம்பட்டி சீ. பாரதி எழுதிய கடிதம். சீனாவின் சந்திர மண்டல ஆய்வு பற்றி செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் கேட்டேன். சாங் ஹெ 1 எனும் ஆய்வு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தி ஆய்வு செய்வது பற்றியும், ஆண்டுக்கு ஆண்டு தமது திட்டத்தை செயல்படுத்தும் என்றும் அறிந்துகொண்டோம். உலகில் இதுவரை செய்யப்படாத அறிவியல் தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்தவுள்ளது என் அறியத்தந்தீர்கள். மிக்க நன்றி என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து ஆண்டரசன்பட்டி ஆர். அன்னாள் டாரத்தி எழுதிய கடிதம். தற்சமயம் 9ம் வகுப்பு படிக்கும் நான் தினமும் சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். மக்கள் சீனம், வரலாற்றுச் சுவடுகள், சீனாவில் இன்பப்பயணம், மலர்ச்சோலை, சீன மகளிர் ஆகிய நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். என்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் சீன வானொலி பற்றி அறிமுகப்படுத்தி, கேட்கும்படி கூறுகிறேன் என்று எழுதியுள்ளார்.


கலை: அன்பு டாரத்தி நீங்கள் சீன வானொலியைக் கேட்பதில் ஆர்வம் கொண்டுள்ளமைக்கு நன்றிகள். கல்வியில் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.
கலை......அடுத்து கம்பம் அ. இருதயராஜ் எழுதிய கடிதம். மே திங்கள் 6ம் நாள் ஒலிபரப்பான செய்திகளில், கிராம உழைப்பாளர்களுக்கு மாற்று தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதை அறிந்துகொண்டேன். 120 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 86 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து காளியப்பம்பாளையம் ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், சீனப் பட்டு பற்ரிய தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு சீனப் பட்டுத்துணிகள் அனுப்பப்பட்டன என்றும் அந்த பாதையின் பெயர் பட்டுப்பாதை என்றும் குறிப்பிடப்பட்டது. மஞ்சள் பேரரசரரின் துணைவியான அரசி, பட்டுதேவதை என்று அழைக்கப்பட்டதையும் அறிந்தேன். பட்டுப்பற்றி விரிவாக தகவல் தந்தமைக்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


கலை: தொடர்ந்து இலங்கை காத்தான்குடி மு. அ. பா. ரின்சானா எழுதிய கடிதம். சீன வானொலியின் நேயர் குடும்பத்தில் என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு நன்றிகள். தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறேன். நேயர் நேரம் நிகழ்ச்சியை நான் விரும்பி கேட்கிறேன். ஆனால் இலங்கையில் சற்று தெளிவற்றதாகவே ஒலிபரப்பு கேட்கிறது. இயன்றால் ஒலிபரப்புத் திறனை நீங்கள் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்பு ரின்சானா உங்கள் கருத்தைக் குறித்து வைத்துக்கொண்டோம். தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதியனுப்புங்கள்.