• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-13 21:39:13    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம் பற்றி

cri

முதல் தொகுதியில் 147 திட்டப்பணிகள் இடம்பெறுகின்றன. மத்திய நிதியம் சுமார் 735 கோடி யுவான் முதலீடு செய்துள்ளது என்றார் அவர்.
பெய்ஜிங் tian hui hua டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனம் ஆராயும் பி ரக வண்ண டிஜிட்டல் மிகை ஒலி அலை சோதனை சாதனம் முதல் தொகுதித் திட்டப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.


இத்தகைய சாதனத்தை ஆராயந்ந்து தயாரிப்பதற்கு, குறைந்தது ஒரு கோடி யுவான் தேவைப்படுகின்றது. இந்த பெரும் தொகையான முதலீடு, tian hui hua டிஜிட்டல் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற சிறிய ரக நிறுவனத்துக்கு பொருளாதார ரீதியில் மாபெரும் இடப்ப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் என்பதில் ஐயமில்லை என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் SHEN JIAN LEI கூறினார். ஆனால், இத்திட்டப்பணி தேசிய நிலை ஆதரவு திட்டத்தில் சேர்க்கப்பட்டப் பிறகு, இந்த ஆய்வு தமது நிறுவனத்தின் சொந்த கடமை அல்ல. அவர் கூறியதாவது
தேசிய ஆதரவு திட்டம் 30 இலட்சம் யுவான் நிதியுதவி வழங்குகின்றது. இதர தொழில் நிறுவனங்களிலிருந்து மேலும் 30 இலட்சம் யுவான் கிடைக்கலாம். இவ்வாறு அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணிக்குப் பொறுப்பு ஏற்ற பின், எமது நிறுவனம் சமூகத்திலிருந்து முன்பை விட சுமார் 10 மடங்கு முதலீட்டை உட்புகுத்தலாம். தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டம் எங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்துள்ளது என்றார் அவர்.


மூலவளமும் இத்திட்டம் முக்கியமாக ஆதரவு வழங்கும் அம்சமாகும். திட்டத்தின் படி, 2010ம் ஆண்டுக்குள், திட்டத்தின் மூலம், சிற்பபுத் தேவைக்கென சீனா 3 அல்லது 4 பெரிய சுரங்கங்களைக் கண்டுபிடிக்கும். தொழில் துறையில் நீர் மறு பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, கடல் நீர் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய தொழில் நுட்பங்களைக் கைபற்ற வேண்டும்.
அதேவேளையில், இந்த ஆதரவு திட்டம், மக்களின் உடல் நலம், போக்குவரத்து முதலிய மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டப்பணிகளுக்கு முக்கியமாக உதவி வழங்கும். பெய்ஜிங் மாநகர் காவல் துறை அலுவலகத்தின் பொது பாதுகாப்பு போக்குவரத்து நிர்வாக துறையைச் சேர்ந்த போக்குவரத்து வழிகாட்டு மையத்தில், அறிவார்ந்த போக்குவரத்து நிர்வாகத் தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. ஆதரவு திட்டத்தின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட இத்தொகுதி மூலம், பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து நிலைமையை முற்றிலும் கையாண்டு, நவீன நிர்வாகம் செய்யலாம்.

 புள்ளிவிவரங்களின் படி, இந்தத் தொகுதி இயங்கிய பின், பெய்ஜிங் சாலை சந்திப்புகளின் போக்குவரத்து திறன் சராசரியாக 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பெய்ஜிங் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மின்காந்த உணர்வறி வளைகள் பொருத்தப்பட்டன. வாகனங்கள் வந்து போகும் நிலைமையை சோதனை செய்வதன் மூலம், போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு வழிகாட்டி போக்குவரத்து தடையை நீக்கலாம் என்று இம்மையத்தின் பொறுப்பாளர் wu xian li எடுத்து கூறினார். அவர் கூறியதாவது
புதிய நிர்வாகத் தொகுதி இயங்கிய பின், எமது காவலர்கள் அழைக்கப்பட்டதினால், 3.6 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றடையலாம். முன்பு, இதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது என்றார் அவர்.
மேலும், உயர் வேக காந்த தொடர் வண்டி போக்குவரத்து தொகுதியும் போக்குவரத்துத் துறையிலான முக்கிய திட்டப்பணியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தின் நடைமுறையாக்கத்துடன், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு ஆற்றல் பன்முகங்களிலும் உயர்த்தப்படும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப துறையினர்கள் பொதுவாக கருதுகின்றனர்.