• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-13 21:55:38    
உணவுகளும் உள்ளங்ற்த பொருளும்

cri

சீனப் பண்பாட்டில், நூடுல்ஸ் என்பது நீழ்ச்சியின் நீண்ட தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. பிறந்த நாள் விழாக்களின் போது மெழுகுவத்திகளை ஏற்றி, கேக்கை சுற்றி வைத்து, அதை ஊதி பின் கேக்கை வெட்டுவதை போல, நூடுல்ஸ் இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சீனாவில் இல்லை எனலாம். நீண்ட, நல்வாழ்வு வாழும் எதிர்பார்ப்புடன் இளைஞரோ, முதியவரோ, சிறுவர் சிறுமியரோ அனைவருமே நூடுல்ஸ் சாப்பிடுகின்றனர்.

மேலும், நூடுல்ஸ் சாப்பிடும் போது, வாய்க்கும், பாத்திரத்துக்கும் இடையில் தொங்கும் இழைகளை உறிஞ்சி விடுவதையும் பார்த்திருக்காலம். நீண்ட ஆயுளை அடையாளப்படுத்தும் நூடுல்ஸ, வெட்டி விடாமல் துண்டித்து விடாமல், சாப்பிட வேண்டும். பாதியில் தொங்கும் நூடுல்ஸை துண்டித்து விட்டால் அது துரதிர்ஷடமாக கருதப்படுகிறது.
பச்சரிசி சோறும், மீன் குழம்பும் அற்புதமான ஒரு இணை என்று சொல்வார்கள். அதிலும் மீன் குழம்பு ஒரு நாள் கழித்து சாப்பிட்டால், அலாதி சுவை. சீனர்கள் மீனை காரசாரமாக சூழம்பு வைத்து சாப்பிடுகிறார்களோ இல்லையோ மீன் என்பது விருந்தில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருளாக அமைந்துள்ளதை கான்பது மட்டும் உண்மை.
சீன மொழியில் "யு" என்றால் மீன் என்று பொருள். ஆனால் அதே "யு" என்ற ஒலிக்கு "வளம்" என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது எழுத்துக்கள் வேறு, ஒலி ஒன்று. யு என்றால் மீன் என்றும், வளம் என்றும் பொருள் கொள்ளலாம்.


பொதுவாக புத்தாண்டுக்கு முந்தைய நாள் நடைபெறும் விருந்தில், மீன் நிச்சயம் இடம்பெறும். இதன் உள்ளார்ந்த பொருள், எதிர்வரும் ஆண்டில், புத்தாண்டில், எல்லா வளமும், செழுமையும் நிறைவாக தங்கியிருக்க வேண்டும் என்ற வாழ்த்தும் விருப்பமும் ஆகும். மேலும் மீனானது தலை உடல் வாய் என முழுமையாக விருந்தில் பரிமாறப்படும். ஆண்டின் துவக்கமும், முடிவும் நன்றாக அமைய வேண்டும் என்பதை இது அடையாளப்படுத்தும். "நியன் நியன் யோ யு" என்று கூறுவார்கள். அதாவது ஒவ்வொரு ஆண்டும் வளம் உண்டு. ஆண்டுதோறும் வளமுண்டு என்பதைத்தான் சீன மொழியில் "நியன் நியன் யோ யு" என்று சொல்வார்கள். அதே போல் புத்தாண்டு கொண்டாட்ட விருந்தில் ஆண்டுதோறும் மீனும் இடம் பெறுகிறது.
மீனை பற்றி சொல்லியாகி விட்டது. அடுத்து முட்டை. முட்டை உலகில் பல்வேறு பண்பாடுகளில் சிறப்பு அடையாளமாக பொருளாக கருதப்படுகிறது. சீனாவும் அதற்கு விதிவிலக்கல்ல. முட்டை என்பது மகப்பேற்றுக்கு பிள்ளைச் செல்வத்துக்கு அடையாளமாக சீனர்கள் நம்புகின்றனர். பொதுவாக குழந்தை பிறந்தால் பெற்றோர். "சிவப்பு முட்டை மற்றும் இஞ்சி விருந்து" அளிக்கின்றனர். இவ்விருந்தில் வேகவைத்த முட்டையை சிறப்பாக அளிக்கின்றனர்.


சீனாவின் மையப்பகுதியில் முட்டையின் எண்ணிக்கை, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பொறுத்த அமையும். இரட்டைப்படை எண், பொதுவாக 6 அல்லது 8 சிவப்பு முட்டைகள், ஒரு முனையில் கரும்புள்ளியுடன் இருந்தால் அது ஆண் குழந்தைக்கான விருந்து. ஒற்றைப்படை எண், பொதுவாக 5 அல்லது 7 முட்டைகள், கரும் புள்ளி இல்லாமல் தரப்பட்டால அது பெண் குழந்தைகளுக்கான விருந்து புத்தாண்டின் போதும், இது செழுமைக்கு அடையாளமாக, விருந்தில் அளிக்கப்படுகிறது.