• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-14 17:34:09    
ஒலிம்பிக் தன்னார்வ தொண்டர்கள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தன்னார்வத் தொண்டர் பணிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 30 ஆயிரத்தை அடைந்துள்ளது. அவர்களில், நகரங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் திங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தன்னார்வத் தொண்டர்கள் திட்டப்பணி துவங்கிய பிறகு, ஒலிம்பிக்கை வரவேற்பது என்ற தன்னார்வ சேவை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் முன் பணிக்கான தொண்டர்கள், போட்டிக்கான தொண்டர்கள், நகரத்துக்கான தொண்டர்கள், சமூக தொண்டர்கள் ஆகிய திட்டப்பணிகளை உள்ளிட்ட பணி அமைப்பு உருவாக்கப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு தரப்புகள், ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் பணியில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொள்வதை, ஆதரதித்துள்ளன. முன்னர் நடைபெற்ற "அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற தொடர் போட்டியில், சுமார் 30 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள், போட்டிக்கான சேவைகள் மற்றும் நகரங்களுக்கான சேவைகளில் கலந்துகொண்டனர்.

அண்மையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு குழு, 89வது நிர்வாக குழு கூட்டத்தை நடத்தியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் குழுவின் தலைவர் liu qi இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஒலிம்பிக் கிராமம், செய்தியாளர்கள் தங்கும் ஊடக கிராமம், முக்கிய செய்தி மையம், சர்வதேச ஒளிபரபபு மையத்தின் பட்டியலின் உருவரைவு ஆகியவை தொடர்பான ஆயத்த பணிகளை இக்கூட்டம் கேட்டறிந்தது. வீரர்கள் மற்றும் செய்தியாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில், பல்வேறு நாடுகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பண்பாட்டு பின்னணி, உணவு பழக்கங்கள் ஆகியவற்றை கருதி, உலகில் மாறுபட்ட உணவு வகைகளை இப்பட்டியல் உள்ளடக்கும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் உணவு பட்டியல், சீனாவின் சிறப்பான உணவு வகைகளை கொண்டிருக்கும். சீன உணவு, வகைகள் ஒலிம்பிக் உணவின் தனிச்சிறப்பாக மாற கூடும்.