நகர், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த தான் தூங் நூறு ஆண்டுக்கால வரலாறு வாய்ந்த நகராகும். இது, வடகொரியாவை ஒட்டி அமைந்துள்ளதால் சீனாவி்ன் மிகப் பெரிய எல்லையைக் கொண்ட நகராகும். இங்கு, ச்சிங் ஷான் கெள எனும் இயற்கைக் காட்சி மண்டலம் உள்ளது. இது உள்ளத்தைக் கொண்னை கொள்ளும் மிக அழகான இயற்கை காட்சி இடமாகும்.

காலையில் தோன்றும் கதிரவன், மாலையில் உதிக்கும் நிலவு, சோலையில் மலஞம் பூக்கள், வானத்தில் மிதக்கும் மேகங்கள், நீல ஆடை போன்ற வான்ப்பரப்பு, வானவீதியில் இரவில் உலா வரும் நிலா, முத்துகளைப் பரப்பியது போன்ற விண்மீன்கள், இவை அனைத்தும் இயற்கை தரும் அழகுக்காட்சிகள் அல்லாவா?இவற்றை கண்டு பார்த்து, அழகைப் பருகி மனமகிழ்ச்சி கொண்ளுங்கள்.

காலையில் கிழக்கே தோன்றும் கதிரவன் தங்கத்தட்டுப் போல் காட்சி தருகிறது. மாலைப் பொழுதில் நிலவைப் பார்த்தால் வெள்ளித்தட்டுப்போல் மின்னுகிறது. இவைகள் கண்கொள்ளாக் காட்சிகள் அன்றோ!காண்டு ரசியுங்கள்! இவைகள் மட்டுமா?மேகம் தவழும் மலை, அதன் மேனியெங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போலப் பசுமரக்காடுகள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல விழும் அருவிகள், நம்மை மயக்கும் இனிய காட்சிகள் அல்லவோ! மலையில் இருந்து நிலத்தை அடைந்த அருவிகள் ஆறாக ஓடி, கல்லும் மலையும் குதித்து வரும் அழகும், காடும் மேடும் கடந்து வரும் அழகும், எல்லை விரிந்த சமவெளி எங்கும் இறங்கித் தவழ்ந்து வரும் அழகும் இயற்கை காட்சியின் கொள்ளை அழகை அள்ளித்தருகின்றனவே!

மரமும், செடியும் கொடியும் பூத்துக் குலுங்கிப் புன்னகை செய்வதைப் பாருங்கள்!மணக்கும் மலர்களின் நறு மணத்தை நுகருங்கள்!மலர்களில் இத்தனை வகைகளா! வண்ண வண்ண மானவை, முகமெனத் தோன்றுபவை கண்ணெனக் காட்சி தருபவை, கூப்பிய கைகளாய்க் குவிந்த வை அனைத்தும் வண்டுகளின் வரவை எதிர்நோக்கி நிற்பதைப் பாருங்கள்!ரீங்காரம் இசைக்கும் வண்டுகளுக்கு இனிய தேன் தந்து உண்ணச் செய்வதை உற்று நோக்குங்கள்! மல்லிகை, முல்லை முதலிய பூக்கள் மாலையில் மலர்கின்றன. ஏன்?கதிரவன் மறைந்து, மாலைப்பொழுது வந்துவிட்டது என்பதை மக்களுக்கு அறிவிப்பதற்காக. மாலையில் மலரும் அம்மலர்களுக்கு மிகுந்த மணம் ஏன்?வண்டுகள் தம் இருப்பிடம் தேடி வருவதற்காக. அவை வந்தால்தானே மகரந்தச்சேர்க்கை உண்டாகி இனப்பெருக்கம் ஏற்படும்!

மாலையில் பூக்கும் மலர்கள் வெண்ணிறம் கொண்டவை, ஏன்?இரவில் தம்மை நாடி வரும் வண்டுகளுக்குத் தம் இருப்பிடத்தைத் தெரிவிக்கவே. இவ்வாறு ஒவ்வொன்றும் காரணகாரியத்தோடு படைக்கப்பட்ட இயற்கை அழகை உணருங்கள்! அழகுப் பொருள்கள் என்றும் எவர்க்கும் இன்பம் தரும். கவிஞர்கள் அவற்றைக் கண்டனர், மயங்கினர். இன்புற்றனர். விளைவு கவிதைகள் பிறந்தன.
|