2001ம் ஆண்டு முதல், திபெத் வளர்ச்சிக்கான உதவி நிதியம், திறமைசாலிகளை பயிற்றுவிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 220க்கு மேலான வறிய மாணவர்களுக்கு, 9லட்சத்துக்கு மேலான யுவான் உதவித் தொகை வழங்கியது.
திபெத் வளர்ச்சிக்கான உதவி நிதியம் நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில், 20கோடி உதவித் தொகை திரட்டப்பட்டது. சுகாதார மற்றும் மருத்துவசிகிச்சை உதவியை உள்ளடக்கமாக கொண்ட ஒளிமயமான திட்டம், பண்பாடு மற்றும் கல்வி உதவியை உள்ளடக்கமாகக் கொண்ட திறமைசாலி பயிற்சித் திட்டம், வறுமை ஒழிப்பு மற்றும் துயர் துடைப்பு உதவியை உள்ளடக்கமாக கொண்ட சமூகப் பொது நலத் திட்டம் மற்றும் சூரிய ஒளித் திட்டம் ஆகியவற்றை இந்நதியம் மேற்கொள்கிறது. திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு, இந்நிதியம் முக்கியமாக உதவி வழங்குகிறது.
|