• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-15 14:11:16    
இரட்டையர் விழா

cri

650 க்கு மேற்பட்ட ஒரே மகப்பேற்றில் பிறந்த இரட்டையர் , மூவர் மற்றும் அதற்கு மேலான குழந்தைகள், சீன தேசிய நாளை சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 2 ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வது பெய்ஜிங் இரட்டையர் பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

கிழக்கு பெய்ஜிங் காங்லிங்ஜின் பூங்காவின் ஏற்பாட்டில் தயார் செய்யப்பட்ட சிவப்பு கம்பள விரிப்பில் ஒரே மாதிரியாக தோற்றமளித்த இரட்டை குழந்தைகள் நடந்து வந்தபோது பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தனது சகோதரி வாங் யுதெங் உடன் வந்திருந்த 5 வயதான வாங் யுபெய் "நான் ஒரு கலையுலக நட்சத்திரம் போல் உணர்கிறேன்" என்றார். அவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இரட்டையர்கள், எல்லோராலும் சொல்லப்பட்ட 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் முழக்கங்களோடு நிறைவுற்ற தீப தொடரோட்டத்தில் பங்கேற்றனர். மேலும் ஆடல், பாடல், உரையாடல் மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தனது சகோதரிகள் லி ஜிங் மற்றும் லி மியோ உடன் வந்திருந்த மேனிலைப்பள்ளியில் படிக்கும் லி சின் "எங்களை போன்று திறமையானவர்களை தேடிக்கொண்டிருப்பவர்களை இந்நிகழ்ச்சிகளின் வழியாக ஈர்க்க முடியும் என எண்ணுகிறோம்" என்றார். இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக இவ்விழாவில் கலந்து வருகின்றனர்.

முதலாவது பெய்ஜிங் இரட்டையர் பண்பாட்டு விழா 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் நடத்தப்பட்டது. 500 இரட்டையர்களை கவர்ந்திழுத்த அந்நிகழ்வுக்கு பின்னர் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்றானது என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஓன்றிற்கு பதிலாக இரட்டையை வழக்கமாக தெரிவு செய்யும் சீனர்கள் புதுமண தம்பதியரை 'இரட்டை மகிழ்ச்சி' பெற வாழ்த்துகின்றனர். ஒரே மகப்பேற்றில் இரண்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறப்;பது அதிஷ்டமாக கருதப்படுகிறது. ஆண் பெண் இரட்டை குழந்தைகள் 'டிராகன்-ஃபீனிக்ஸ்' இணை என செழுமைக்கான இரு பண்பாட்டு அடையாளங்களை குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது.

ஒற்றைக்குழந்தைகளுக்கும் ஒன்றுதான் வேண்டுமாம்

சீனா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் அம்சமாக,குடும்ப நலத் திட்டத்தில் நகரவாசிகள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று 1970களில் சீனாவில் விதிக்கப்பட்டது. ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று நமக்கு இல்லையே என்று அந்நாளில் இது குறித்து மக்கள் கொஞ்சம் கவலைப் பட்டிருக்கக்கூடும். ஆனால் இன்றை தலைமுறையினரின் கருத்து வேறு விதம். ஒற்றைக்குழந்தையாய் பிறந்த இன்னும் திருமணமாகாத பெய்சிங் நகரவாசிகளிடையே அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 50 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர், தற்போது நாட்டின் குடும்ப நலத்திட்ட கொள்கை இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதித்தாலுமே கூட, எங்களுக்கு ஒன்று போதும் என்று கூறியுள்ளனர். பெய்சிங் மாநகரில் ஒற்றைக்குழந்தையாய் பிறந்து வளர்ந்து இன்று பெரியவர்களாய் நிற்ப்பவர்கள் ஏறக்குறைய 20 இலட்சம் பேர் இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களில் 20 முதல் 34 வயது வரையான திருமணமாகாத நபர்களிடம் பெய்சிங் நிர்வாக கல்லூரி நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் பங்கேற்ற 1110 பேரில் 52 விழுக்காட்டினர் தங்களுக்கு ஒரு நாம் இருவர் நமக்கொருவர் என்ற ரீதியில், ஒரு குழந்தையே போதும் என்று கூறியுள்ளனர். 24 விழுக்காட்டினர் மட்டுமே தங்களுக்கு இரு குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் 25 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர் இரட்டை வருமானம் குழந்தை இல்லை என்ற வாழ்க்கையை விரும்புகின்றனர். வருமானம், குழந்தை பராமரிப்பு, வீடு, கொள்கை நிலை இவை நான்குமே குழந்தைகள் வேண்டுமா வேண்டாமா, ஒரு குழந்தையா இரு குழந்தைகளா என்பதை நிர்மாணிக்கும் அம்சங்களாக பெய்சிங் நிர்வாக கல்லூரியின் பேராசிரியர் ஹௌ யாஃபெய் குறிப்பிடுகிறார். முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பதும், குழந்தை பிறப்பு குறைவதும் மக்கள் தொகையிலான சமநிலைக்கு ஒரு சவாலாக அமையும் என்பது பலாது கரிசனை. சில மாநில அரசுகள் இதை உணர்ந்து விதிகளை தளர்த்தி ஒரு குழந்தை மேல் பெற்றுக்கொள்ள பலரை அனுமதித்துள்ளன.

சோஃபா படுக்கையில் மறைந்திருந்த பழங்கால ஓவியம்

பழுதான, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சோஃபாவை வாங்கிய பெர்லின் மாணவி, தான் படுத்த அவ்விருக்கையினுள்ளே 15 நூற்றாண்டு காலத்துக்கு ஒத்த கலை அம்சங்கள் கொண்ட ஓவியம் மறைந்திருந்ததை கண்டுபிடித்தார்.

சோஃபாவின் மடிந்து கொடுக்கும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம் ஹாம்பர்க்கில் 19,200 யூரோ அதாவது 27,660 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. "ஓவியத்தை கண்டறிவதற்கு முன் சில நாட்கள் சோபா படுக்கையை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த ஓவியம் சோபாவில் வந்ததெப்படி என அவருக்கு தெரியாது" என்கிறார் கேற்றர்ரர் குன்ஸ்ட் ஏலநிறுவன தொடர்பாளர் மைக்கேலா டிரா அம்மையார்.

இம்மாணவி 16,000 யூரோவை இந்த ஒவிய விற்பனையிலிருந்து பெற்றுள்ளார். 'எகிப்திற்கு செல்வதற்கான ஏற்பாடு' என்று தலைப்பு பெறும் இந்த ஓவியம் 1605 லிருந்து 1610 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்றும், பெயர் அறியாத இதன் ஓவியர், வெனிஸை சார்ந்த கார்லோ சராசினி என்ற ஓவியரோடு தொடர்புடையவர் என்றும் வல்லுனர்கள் தொரிவிக்கின்றனர்.

பதிவாகாத பிறப்பு விகிதம்

உலகில் ஓவ்வொரு வருடமும், 128 மில்லியன் குழந்தைகள் பிறப்பில், 40 விழுக்காடு பதிவுக்கான வசதிகள் இல்லாததால் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்தது. இறப்பு பதிவு நிலை இன்னும் மோசமாக உள்ளது. ஆண்டுக்கு 57 மில்லியன் இறப்பில் மூன்றில் இரண்டு பகுதி பதிவு செய்யப்படுவதில்லை என ஐக்கிய நாடுகளின் முகவாண்மை தெரிவித்தது.

வளரும் நாடுகளில் பதிவுக்கான வசதிகள் குறைவாக இருப்பதால் பிறப்பு, இறப்பு மற்றும் இறப்புக்கான காரணங்கள் ஆகியவற்றின் புள்ளிவிபரங்களை சேகரிப்பது கடினமாகின்றது. இப்புள்ளிவிபரங்கள் தான் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் சுகாதார மேம்பாட்டு உதவிகள் சரியான முறையில் சென்று சேர்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுபவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் உதவியோடு செயல்படும் சுகாதார புள்ளிவிபர அமைப்பு, வளரும் நாடுகளின் பிறப்பு இறப்பு பதிவுகளை மேம்படுத்தமுயற்ச்சிகளை தொடங்கியுள்ளது. கம்போடியா, சீரா லியோன் மற்றும் சிரியா உள்ளிட்ட மிகவும் தேவைப்படும் பல நாடுகளுக்கு பதிவு வசதி வளர்ச்சிக்கான தீவிரமான பணியை இது மேற்கொண்டு வருகிறது.