• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-15 16:33:38    
சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிசம்

cri

கலை.........நாங்கள் அக்டோபர் திங்கள் நடுப் பகுதியில் நடைபெற உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டுடன் தொடர்புடைய செய்திகளை விளக்கி கூற இருக்கின்றோம்.

தமிழன்பன்......அப்படியானால் நான் ஒரு வினா கேட்கலாமா?

கலை.....கண்டிப்பாக கேளுங்கள்.

தமிழன்பன்.........சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிசத்தின் அடிப்படை என்ன? இது பற்றி எனக்கும் நமது நேயர்களுக்கும் விளக்கி கூறுங்களேன்.

கலை......சரி நிச்சயமாக விளக்கிக் கூறுகிறேன். சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷலிசம் பற்றி கூறும் போது அதன் அடிப்படையை அறிந்து கொள்வது முக்கியமானது. அறிவியல்பூர்வ சோஷலிசத்தின் அடிப்படை கோட்பாட்டையும் சீன சோஷலிச கட்டுமானத்தின் நடைமுறையையும் இணைப்பது என்பது சீனத் தனிச்சிறபியல்பு மிக்க சோஷலிசமாகும். இதில் சோஷலிசம் பொது விதியாகவும் அடிப்படை தனித் தன்மையாகவும் திகழ்கின்றது. சீனத் தனிச்சிறபியல்பானது சீனாவில் சோஷலிசத்தின் அடிப்படை கோட்பாட்டின் முக்கிய உருப்படியான வெளிப்பாடாகும்.

தமிழன்பன்.......சரி, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவற்றை பொருத்தமாக இணைக்கின்றது?

கலை.........சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியை துவக்கியது முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸத்தின் அடிப்படை தத்துவத்தை சீன நாட்டின் நிலைமை மற்றும் தற்கால தனிச்சிறபியல்புடன் இணைக்கும் அதேவேளையில் சீனாவின் சோஷலிச கட்டுமானத்தில் பெறப்பட்ட அனுப்பவங்கள், படிப்பினைகள், மற்ற சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, தோல்வி, வளரும் நாடுகள் நாட்டின் வளர்ச்சியில் கண்ட நன்மை தீமைகள், வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர்ச்சி போக்கு, முரண்பாடு ஆகியவற்றை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக அறிவியல்பூர்வ முறையில் ஆராய்ந்து தொகுத்துள்ளது. சீனாவின் சோஷலிச வளர்ச்சி பாதை, வரலாற்று காலகட்டம், அடிப்படை கடமை, நெடுநோக்கு ஏற்பாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கான முறையில் விளக்கி கூறியுள்ளது. சீனத் தனிச்சிறபியல்பு வாய்ந்த சோஷ்லிச பாதையை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.

தமிழன்பன்........பொருளாதாரத் துறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனிச்சிறபியல்பு மிக்க கருத்து கொண்டுள்ளதா?

கலை.......உண்டு. இத்துறையில் பொது உடைமை முறையை மையமாக கொண்டு பல வகை உடைமை முறைகள் கொண்ட பொருளாதார கூட்டு வளர்ச்சிக்கான அடிபடை பொருளாதார அமைப்பு முறையில் சீனா ஊன்றி நின்றுள்ளது. இதன் மூலம் பல்வகை உடைமை முறைகள் கொண்ட பொருளாதாரத்தின் சம போட்டி கூட்டு வளர்ச்சி என்ற புதிய நிலைமை உருவாயிற்று.

தமிழன்பன்.......பொருளாதார வளர்ச்சி தவிர அரசியல் துறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுகின்றது?

கலை........அரசியல் ரீதியில் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வு அமைப்பு முறை, சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி அமைப்பு முறை ஆகியவற்றை சீனா பின்பற்றியுள்ளது.

தமிழன்பன்......பண்பாட்டு துறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஊன்றி நின்றுள்ளது?

கலை........பண்பாட்டு துறையில் சோஷலிச மைய மதிப்பு முறைமை சமூக சிந்தனைப் போக்கிற்குத் தலைமை தாங்குவதில் சீனா ஊன்றி நின்றுள்ளது. வேறுபாடுகளை மதிக்கும் போக்கில் சமூகத்தில் பொது கருத்தை விரிவாக்கியுள்ளது. பல வகைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் பொது எண்ணத்தை அதிகரித்துள்ளது. சீனத் தனிச்சிறபியல்பு மிக்க சோஷலிசமானது சீனாவை வலிமை ஜனநாயகம், நாகரீகம், இணக்கம் கொண்ட சோஷலிச நவீன மயமாக்க நாடாக கட்டியமைக்கும் இன்றியமையாத பாதையாகும். இது வெற்றிகரமான பாதையும் ஆகும்.

தமிழன்பன்.......கலை இன்றைய நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி பற்றியும் சீனத் தனிச்சிறபியல்பு மிக்க சோஷலிசம் பற்றியும் குறிப்பிட்டதை அறிந்து கொண்டுள்ளேன். சீனாவில் நீண்டகாலமாக தங்கி சீனா பற்றியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் நான் மெதுமெதுவாக அறிந்து கொள்வேன் என எனக்கு நம்பிக்கை பிறந்தது.

கலை......நீங்கள் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய நிகழ்ச்சியை கேட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் சீனா பற்றியும் மேலும் கூடுதலாக அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

தமிழன்பன்.......கண்டிப்பாக. மிக அதிகமாக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.