தற்போது, பெய்ஜிங் மாநகரில், ஆண்டின் மிக அழகான காலமான இலையுதிர்காலம் இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில், இலையுதிர்கால இயற்கைக்காட்சியை ரசித்து, உடல் பயிற்சி செய்வதற்கான மிக நல்ல இடமான பெய்குங் என்னும் காட்டுப்பூங்கா பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

பெய்குங் என்னும் காட்டுப்பூங்கா, பெய்ஜிங் மாநகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பெய்ஜிங் மாநகரப்பகுதியிலிருந்து மேற்கு நோக்கி, சுமார் 30 நிமிடத்தில் கார் மூலம், இப்பூங்காவைச் சென்றடையலாம். மலை மற்றும் காட்டில், சுற்றுலா, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி, எடுத்து செல்ல பழங்கள் என்பன போன்ற பல்வேறு பட்டத்தன்மைகளைக் கொண்ட பூங்கா, இதுவாகும். இதன் பரப்பளவு, சுமார் எட்டு சதுர கிலோமீட்டராகும். கடல் மடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரமான மலை குன்றுகள் சில, இக்காட்டுப்பூங்காவில் உள்ளன.

இலையுதிர்காலத்தில் இப்பூங்காவின் குன்றுகளில் சிவப்பு இலைகள் நிறைந்து உள்ளன. பெய்ஜிங்கின் சியாங் சான் மலையும், பெருஞ்சுவரும், சிவப்பு இலைக் காட்சியைப் பார்த்து ரசிக்க புகழ்பெற்ற இடங்களாகும். ஆனால், பெய்குங் பூங்காவின் சிவப்பு இலைக் காட்சி மிக சிறப்பானது. தொலைவிலிருந்து ிதைப் பார்த்தால், இலைகள், வண்ணமான கம்பளம் போல் தோன்றுகிறது. தனிச்சிறப்புடைய persimmon-பழங்கள் கொண்ட அடர்ந்த மரங்களான காட்டுப்பகுதி, சிவப்பு இலைகளுக்கு மாறான அரஞ்சி வண்ணத்தை ஏற்படுத்துகிறது. பயணிகள், persimmon காட்டுப் பாதையில் நடகின்ற போது, முதிர்ந்த பெர்சிமன் பழம் கிடைக்க வாய்ப்புள்ளது. பச்சை பழங்களையும் காய்கறிகளையும் விரும்பும் பயணிகள், தங்கள் விருப்பப்படி எடுத்துச்செல்லலாம். பூங்காவுக்கு வெளியே, கிராம விவசாயிகள், தங்கள் வீடுகளில் பயிரிடும் காய்கறிகள் மற்றும் பழங்களை, சாலையின் பக்கங்களில் விற்பனை செய்கிறனர். இந்த இயற்கை காய்கறிகளின் தூய்மை மற்றும் நல்ல சூழ்நிலையினால், பயணிகள், மன நின்மதியை உணர்ந்துள்ளனர்.

பூங்காவில் நடகின்ற போது, வெகுவிரைவாக நகரத்தின் கெடுபிடிகளை மறக்க முடிகிறது. மலை அடிவாரத்தில், சுமார் 15000 சதுர மீட்டர் பரப்பளவான ஏரி ஒன்று உள்ளது. காட்டு வாதுகள், ஏரியில் சுதந்திரமாக நீந்துகின்றன. ஏரியின் சுற்றுப்புறங்களில், பாதைகள், கல் பாலங்கள், தாழ்வாரம் முதலியவை உள்ளன. இது, பூங்காவின் மைய காட்சிப்பகுதியாகும். சீனத் தென்பகுதிக் கட்டிடக்கலைப் பாணியுடன், இப்பிரதேசம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. காலையில், அருகில் வசிக்கும் முதியோர்கள் இங்கு ஒன்று திரண்டு, பெய்ஜிங் ஒப்ரல் நாடகத்தை பாடுகின்றனர். மலையிலான சமதளமான பாதை, அமைதியான சூழ்நிலை ஆகியவை, முதியோர்களின் உடல் நலத்துக்கு பயன் தருகிறது. 68 வயதான LIU RUI SHAN கூறியதாவது:

தூயக்காற்று மற்றும் நல்ல சூழ்நிலை, இங்கு பரவாயில்லை. இயற்கைக்குத் திரும்புவவோம் என்பதை, தற்போது மக்கள் அடிக்கடி சொல்கின்றனர். இச்சூழ்நிலையில், நடப்பது, இயற்கைக் காட்சியைப் பார்த்து ரசிப்பது, மலை ஏறுவது ஆகியவை, முதியோர்களைப் பொருந்த வரை பயன் தருகின்றன.
|